நுவரெலியாவில் உடலின் கீழ் பகுதி இல்லாமல் குழந்தையின் சடலம் மீட்பு!

Published By: Vishnu

13 Jun, 2024 | 08:19 PM
image

நுவரெலியாவில் பிறந்து சில நாட்களேயான இதுவரை அடையாளம் காண முடியாத ஒரு சிறிய குழந்தையின் சடலம் கீழ்பாகம் இல்லாமல் நுரைவெளி போரலந்த ஓடை அருகில் 13ஆம் திகதி வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

கால்வாய்க்கு அருகில் குழந்தையின் சடலம் ஒன்று இருப்பதாக பொரலந்த பிரதேசவாசிகளிடமிருந்து நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசிச் செய்தியின் பிரகாரம், நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவும் பொலிஸ் அதிகாரிகளும் ஸ்தலத்திற்கு வருகைதந்த கால்வாய்க்கு அருகில் குழந்தையின் சடலத்தை கண்டெடுத்தார்கள்.

சம்பவம் தொடர்பில் பிரதேசத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள் மற்றும் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, உயிரிழந்த சிசுவின் பெற்றோரை தேடும் நடவடிக்கைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

நுவரெலியா பதில் நீதவான் ஜயமினி அம்பகஹவத்த விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சிசுவின் சடலத்தை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று பிரேத பரிசோதனையை மேற்கொண்டு குழந்தையின் சடலத்தை பிரேத அறையில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் நீதிமன்றத்துக்கு முன் இடம்பெற்ற துப்பாக்கி...

2025-01-19 17:09:55
news-image

பன்னல வனப் பகுதியில் ஆண், பெண்...

2025-01-19 16:58:07
news-image

அடைமழையினால் நுவரெலியா - உடப்புசல்லாவை பிரதான...

2025-01-19 16:50:40
news-image

கொழும்பு முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-01-19 16:52:59
news-image

பிலியந்தலையில் சட்ட விரோத மதுபானம், கோடாவுடன்...

2025-01-19 16:34:20
news-image

பாவற்குளத்தின் நீர்வரத்து அதிகரிப்பு; நான்கு வான்கதவுகள்...

2025-01-19 16:24:59
news-image

கண்டியில் ஆற்றில் வீழ்ந்து விபத்தில் சிக்கிய...

2025-01-19 16:06:09
news-image

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை! 

2025-01-19 15:54:28
news-image

பேலியகொடையில் ஐஸ், ஹெரோயினுடன் இருவர் கைது

2025-01-19 17:47:36
news-image

குழந்தை ம. சண்முகலிங்கத்தின் இறுதிக் கிரியைகள்...

2025-01-19 16:16:16
news-image

வெல்லம்பிட்டியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-01-19 17:37:06
news-image

பொகவந்தலாவையில் புதையல் தோண்டிய ஐவர் கைது!

2025-01-19 14:57:31