டெல்மேஜ் ஹெல்த்கெயார் மூலம் பல் உட்பொருத்தல் தீர்வுகளை சந்தைக்கு கொண்டுவரும் நோபல் பயோகேயார் இலங்கையில் ஆரம்பம்

13 Jun, 2024 | 06:52 PM
image

பற்கள் மறுசீரமைப்புகளில் சர்வதேச முன்னணி  நிறுவனமான நோபல் பயோகெயார் நிறுவனம் தற்போது இலங்கையில் தனது அதிகாரபூர்வ அறிமுகத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. சிறந்த வரலாறு மற்றும் ஆழ்ந்த மருத்துவ நிபுணத்துவம் ஆகியவற்றுக்குப் பெயர் பெற்ற எங்கள் மதிப்புமிக்க நாமம், இந்த மாறுபட்ட சந்தையில் நாம் தடம் பதிப்பது இதுவே முதல் தடவையாகும்.

மனிதர்களுக்கு பற்களை மீள பொருத்தும் முன்னோடி, நிறுவனமான நோபல் பயோகெயார் நிறுவனம், இலங்கை சந்தையில் பிரவேசிக்கும் முதல் பெரிய பல் மருத்துவ வர்த்தக நாமமாக திகழ்வதில் மகிழ்ச்சியடைகிறது. 

நோபல் பயோகெயார் அதன் விநியோக பங்காளியான டெல்மேஜ் ஹெல்த்கெயார் நிறுவனத்துடன் இணைந்து உயர்தர மருத்துவ - ஆய்வக உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை செலவழிப்பு பொருட்களை வழங்கும் முன்னணி நிறுவனத்துடன் இணைந்து புதிய மற்றும் புதுமையான தயாரிப்புகளை இலங்கை சந்தையில் சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்யும்.

"நோபல் பயோகெயார் நிறுவனத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" என இந்தியா மற்றும் தெற்காசியாவின் என்விஸ்டா பொது முகாமையாளர் பிரியாபிம்ப் பார்த்வால் தெரிவித்தார். 

"நோபல் பயோகெயார் நிறுவனம் புதுமையான பல் உட்பொருத்தல் அடிப்படையிலான பல் மறுசீரமைப்புத்துறையில் உலகின் தலைமைத்துவத்தை பெற்றுள்ளது. 

சுமார் 65 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளால் கட்டப்பட்டது. பல் நிபுணர்களால் தங்கள் நோயாளிகளுக்குத் தரமான வாழ்க்கைத் தரத்தை மீண்டும் வழங்குவதே எமது குறிக்கோள். மில்லியன்கணக்கான நோயாளிகளுக்கு எங்கள் அறிவியல் ஆதரவு மற்றும் முன்னோக்கு தீர்வுகள் மூலம் சிகிச்சையளித்து எமது வாடிக்கையாளர்களுக்கு உதவியாக உள்ளோம்.

"நோபல் பயோகெயார் நிறுவனமானது உயர்தர பயிற்சி மற்றும் கல்வித் திட்டங்களின் மூலம் இலங்கையில் உள்ள பல் சிகிச்சை நிபுணர்களின் அறிவு மற்றும் திறன்களை வளப்படுத்த அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் உள்ளூர் பயிற்சியாளர்கள் பல் உள்பொருத்தும் மருத்துவத்தில் மிக அண்மைக்கால நுட்பங்கள் மற்றும் முன்னேற்றங்களை பெற்றிருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்களின் நோயாளிகளுக்கு விதிவிலக்கான கவனிப்பை வழங்க அவர்களுக்கு உதவுகிறது" 

அதன் இலங்கை விநியோக பங்காளியான டெல்மேஜ் ஹெல்த்கெயார் நிறுவனத்துடன் இணைந்து, நோபல் பயோகெயார் நிறுவனமான எங்களின் அதிநவீன தயாரிப்புகள் கிடைப்பதை உறுதிசெய்து அனைத்து உள்ளூர் நிகழ்வுகளையும் செயல்படுத்தும். பல் மருத்துவ நிபுணர்கள் மற்றும் அவர்களது நோயாளிகளின் வளர்ச்சியடைந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்து இலங்கை சந்தையில் புதிய தயாரிப்புகளை தடையின்றி அறிமுகம் செய்வதற்கு இந்த கூட்டணி உதவும்.

டெல்மேஜ் ஹெல்த்கெயாரின் தலைமை நிர்வாக அதிகாரி அட்ரியன் ஸ்கோக்மேன் இந்த கூட்டணி குறித்து கூறுகையில்,

"நோபல் பயோகெயார்" போன்ற நன்மதிப்பு பெற்ற ஒரு நிறுவனத்துடன் ஒரு சக்தி வாய்ந்த கூட்டணியை உருவாக்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது நிச்சயமாக எங்களின் உலகளாவிய நாமத்தையும் ஏற்றுக்கொள்ளலையும் அதிகரிக்கும். 

"இந்த கூட்டணியானது புதுமைகளை உருவாக்க, மதிப்பை உருவாக்க மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விதிவிலக்கான அனுபவங்களை வழங்க எங்கள் பலத்தை விருத்தி செய்ய உதவும்.

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த வெலிபெல் ஒன் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான தினுஷா பாஸ்கரன், (டெல்மெஜ் நிறுவனத்தின் பங்கு நிறுவனம்) "டெல்மேஜ் கூட்டு நிறுவனங்கள் அதிக ஊக்கம் பெற்று தொடர்ந்து புதிய பாதைகளை உருவாக்கி வருவதை முன்னிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். புத்தாக்கம் மற்றும் எமது குழுமத்தின் பல்வேறுபட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் தயாரிப்புகளை நாங்கள் சேர்க்கிறோம்.

பல் சிகிச்சைத்துறையின் புதிய கண்டுபிடிப்புகளில் உலகின் முன்னோடி 

நோபல் பயோகெயார் நிறுவனமானது, என்விஸ்டா ஹோல்டிங்ஸ் கூட்டு நிறுவனத்தின் பன்முகத்தன்மையின் ஒரு பகுதியாகும். உலகின் தலைசிறந்த பல் சுகாதார சேவைக்கான உபகரணங்களை உற்பத்தி செய்யும் ஆர்ம்கோ எனும் நிறுவனத்துடன் இணைந்து பல் சுகாதாரத்துறைக்கு தேவையான நவீன உபகரணங்களை உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனமாகும். இந்த ஒருங்கிணைந்த நிபுணத்துவம் என்விஸ்டாவை வாய்வழி சுகாதார நிபுணர்களுக்கு விரிவான தீர்வுகளை வழங்குவதில் உலகளாவிய முன்னணியில் உள்ளது.

நோபல் பயோகெயார் புதுமையான உள்வைப்பு அடிப்படையிலான பல் மறுசீரமைப்புகளில் உலகத் தலைமைத்துவத்தை கொண்டுள்ளது. உள்வைப்பு பல் மருத்துவத்தின் ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒருங்கிணைந்த தீர்வுகளின் விரிவான பன்முக சேவையை நிறுவனம் வழங்குகிறது. அத்துடன், தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் விருத்திக்கான அர்ப்பணிப்பையும் வழங்குகிறது. 

நோபல் பயோகெயார்  நிறுவனமானது பல் மருத்துவ நிபுணர்களுக்கு அவர்களின் தொழில் வளர்ச்சியின் அனைத்து கட்டங்களிலும் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி மற்றும் கல்வி, பயிற்சி ஆதரவு மற்றும் நோயாளி தகவல் பொருட்களுடன் ஆதரவை வழங்கிவருகிறது.

பொது முகாமையாளரிடமிருந்து மேலும் சில தகவல்கள் - என்விஸ்டா - இந்தியா மற்றும் தெற்காசியா : பிரியாபிம்ப் பார்த்வால்

"நோபல் பயோகெயார் நிறுவனமானது புதுமையான உள்வைப்பு அடிப்படையிலான பல் மறுசீரமைப்பு துறையில் உலகத் தலைமைத்துவத்தை கொண்டுள்ளது. சுமார் 65 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகளை உருவாக்கி, பல் மருத்துவ நிபுணர்கள் தங்கள் நோயாளிகளுக்கு வாழ்க்கைத் தரத்தை மீண்டும் வழங்குவதற்கு அதிகாரம் அளிப்பதே எங்கள் குறிக்கோள். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் அறிவியல் ஆதரவு மற்றும் முன்னோக்கு தீர்வுகள் மூலம் மில்லியன் கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நாங்கள் உதவியுள்ளோம்.

நோபல் பயோகேர் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தொழில்முறை வளர்ச்சியின் அனைத்து கட்டங்களிலும் ஆதரவளிக்கிறது. பயிற்சி ஆதரவு மற்றும் நோயாளி தகவல், பொருட்களுடன் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி மற்றும் கல்வியை வழங்குகிறது. இந்த அறிமுகத்தின் மூலம் இலங்கையில் உள்ள பல் மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் பாராட்டப்பட்ட தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை கொண்டுவர நாங்கள் முயற்சி செய்கிறோம்.

டெல்மேஜ் ஹெல்த்கெயார் - வாழ்க்கையை எளிமையாக வைத்திருக்க உயர்தர தயாரிப்புகளை பயன்படுத்துதல்

மருத்துவ தொழில்நுட்பத்தின் சக்தியை பயன்படுத்தி, வலியைக் குறைப்பதற்கும் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கும் வாழ்நாளை நீட்டிப்பதற்கும் மில்லியன்கணக்கான இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் டெல்மெஜ் ஹெல்த்கெயார் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் உள்ள அரசு மற்றும் தனியார்துறை சுகாதார நிறுவனங்களுக்கு உயர்தர மருத்துவ / ஆய்வுகூட உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் செலவழிக்கும் பொருட்களை வழங்குவதில் முன்னணியில் உள்ளோம்.

இந்தத் துறையில் எங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, பல சாதனைகள் மற்றும் பங்களிப்புகளுக்கு எங்களை இட்டுச் சென்றுள்ளது, ஒலிம்பஸ், தெர்மோ ஃபிஷர், ஆட்டம், டுட்னவுர், என்ராஃப் நோனிஸ், வையர், கென்ஸ், ஏஞ்சல், யுனைடெட் இமேஜிங், பி.சி.ஏ. மற்றும் பல உலகப் புகழ்பெற்ற நாமங்களுடன் வலுவான உறவுகளை வளர்த்துவருகிறது.

நாங்கள் எங்கள் வணிகத்தை மல்டி-நவீன ஹெல்த்கெயார் தீர்வுகளுக்கு வழங்குநராக நிலைநிறுத்தியுள்ளோம். 

மேலும் மருத்துவமனை, முதியோர் இல்லம், நோயறிதல் மையம் மற்றும் ஆய்வக கூடத்தின் முழுத் தேவைகளையும் வழங்கத் தயாராகவுள்ளோம். அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, இதய, நரம்பியல், சிசு பராமரிப்பு, உடல் பயிற்சி சிகிச்சை, அவசர தேவை பராமரிப்பு, மயக்கவியல், பார்வை தேவை பராமரிப்பு மற்றும் சி.எஸ்.எஸ்.டி. உட்பட சுகாதாரத்துறையின் பல்வேறு பிரிவுகளை கணிசமாக பாதித்துள்ளது. 

எங்கள் பன்முகத்தன்மை மற்றும் நிபுணத்துவம் சுகாதார நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களின் மாறும் தேவைகளை பூர்த்தி செய்ய தொடர்ந்து உருவாகி வருகிறது.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அரசு மற்றும் தனியார் சுகாதார நிறுவனங்களுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு தேவையான பொருட்களை வழங்குவதில் முன்னணியில் உள்ள நாங்கள், கண் சிகிச்சை உபகரணங்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்வழி, ஆய்வுகூட மற்றும் இரத்த வங்கி, சிகிச்சை போன்ற பல்வேறு வகையான முறைகளுக்கான பிரத்யேக அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக இருக்கிறோம். 

உடல் சிகிச்சை, மனோதத்துவ, சி.எஸ்.எஸ்.டி., நரம்பியல், நுரையீரல் மற்றும் கதிரியக்க உபகரணங்கள், மேலும் அறுவை சிகிச்சை தயாரிப்புகள் மற்றும் வீசக்கூடிய மொத்த தொகுப்புக்களை வழங்கல், நிறுவுதல், ஆணையிடுதல் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பராமரிப்பு / பழுதுபார்ப்புக்கான ஒரு பட்டறை மூலம் ஆதரிக்கப்படும் ஒரு விரிவான விற்பனைக்குப் பிந்தைய சேவை ஆகியவை அடங்கும்.

ஹெல்த்கெயார் நிறுவனம் மேலும் சிறப்பை அடைவதற்கான தேசத்தின் முயற்சியில் முன்னணிப் பாத்திரத்தை வகிக்கும் அதேவேளையில், நிறுவனத்தின் முக்கிய திறமையானது, எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பிந்திய மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட மற்றும் உயர்பயிற்சி பெற்ற நிபுணர்கள் எம் குழுவில் உள்ளனர்.

மேலதிக ஊடக தகவல்களுக்கு, சோனல் கோயல் என்பவரை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்: sonal.goel@envistaco.com

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

100PLUS ஐசோடோனிக் பானம் இலங்கையில் அறிமுகம்

2024-07-18 01:32:47
news-image

ரியல் எஸ்டேட் வளர்ச்சியை ஊக்குவிக்க ஐ.சி.சி.யுடன்...

2024-07-17 12:55:38
news-image

பிளவர் குயின் முழு  ஆடைப்பால்மா இலங்கை...

2024-07-17 14:18:07
news-image

புதிய முறைமை​ தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதனூடாக...

2024-07-10 15:06:40
news-image

யூனியன் அசூரன்ஸ் அனுசரணையில் நயோமி இராஜரட்ணம்...

2024-07-05 14:42:25
news-image

2023-2024 Huawei ICT உலகளாவிய இறுதிப்...

2024-07-05 13:59:16
news-image

தேசிய வியாபாரத் தரச்சிறப்புவிருதுகள் நிகழ்வில் மிக...

2024-07-02 13:34:01
news-image

Favourite International மற்றும் Austrade Sri...

2024-06-29 18:46:27
news-image

மோட்டார் வாகன உற்பத்தி /பொருத்துவது மற்றும்...

2024-06-29 16:41:15
news-image

ஹெரிட்டன்ஸ் கந்தலம 30 ஆண்டுகால தனித்துவ...

2024-06-28 14:51:02
news-image

நியாயமான வரிவிதிப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி...

2024-06-26 00:51:50
news-image

சிவனொளிபாத மலையைப் பாதுகாக்க சியபத பினான்ஸின்...

2024-06-22 17:12:50