(இராஜதுரை ஹஷான்)
பேச்சுவார்த்தைகள் ஏதும் இல்லாமல் பொது பயணிகளை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதை அவதானித்துள்ளோம்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு வெள்ளிக்கிழமை (14) பிற்பகல் 02 மணிக்குள் சாதகமான பதில் கிடைக்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என ரயில் நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன போக்குவரத்து அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் ரயில் நிலைய அதிபர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஒரே சேவைக்கட்டமைப்பில் உள்ளடங்கும் ரயில் நிலைய அதிபர், ரயில் ஒழுங்குப்படுத்தல்,ரயில் சாரதிகள், கணிகாணிப்பு முகாமைத்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் ரயில் நிலைய அதிபர் பிரிவு வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுகிறது.
ஏனைய பிரிவுகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டு ஐந்து வருடங்களுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்குவதில் ரயில் நிலைய அதிபர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
இந்த அநீதிக்கு தீர்வு காணும் வகையில் ரயில் நிலைய அதிபர்களுக்கு ஐந்து ஒருடத்துக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்கும் வழிமுறைகளுடன் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு 2024.01.01 ஆம் திகதி எழுத்து மூலமாக சகல தரப்பினருக்கும் அறிவுறுத்தினோம்.
அத்துடன் இவ்விடயம் தொடர்பில் ரயில் திணைக்கள பொதுமுகாமையாளர் உட்பட திணைக்களத்தின் உயர் அதிகாரிகள்,போக்குவரத்து அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.பேச்சுவார்த்தையின் போது வழங்க்கப்பட்ட வாக்குறுதிகள் மீது நம்பிக்கை வைத்து சேவையில் ஈடுபட்டோம்.இருப்பினும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
பேச்சுவார்த்தையின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து ரயில் திணைக்களத்தை நெருக்கடிக்குள்ளாக்கி,பொது பயணிகளை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ரயில் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு உடன் தீர்வு கிடைப்பதையும் நாங்கள் அவதானித்துள்ளோம்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு உடன் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.எமது கோரிக்கைகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை பகல் 02 மணிக்கு முன்னர் சாதகமான பதில் கிடைக்காவிடின் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM