(நெவில் அன்தனி)
இந்தியாவுக்கு எதிராக நியூயோர்க் நசவ் கவுன்டி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற ஏ குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் புதிய நிறுத்தக் கடிகார விதிகளின் பிரகாரம் ஐக்கிய அமெரிக்காவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்டில் நிறுத்தக் கடிகார விதி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் அபராதம் விதிக்கப்பட்ட முதலாவது அணி ஐக்கிய அமெரிக்காவாகும்.
ஒரு ஓவர் நிறைவுபெற்று அடுத்த ஓவரை ஒரு நிமிடத்திற்குள் ஆரம்பிக்காவிட்டால் களத்தடுத்தடுப்பில் ஈடுபடும் அணிக்கு அபராதமாக 5 ஓட்டங்கள் எதிரணியின் எண்ணிக்கையில் சேர்க்கப்படும்.
ஐக்கிய அமெரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 111 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இந்தியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது ஒரு கட்டத்தில் இந்தியா நெருக்கடியை எதிர்கொண்டது.
16ஆவது ஓவர் ஆரம்பமானபோது இந்தியாவின் வெற்றிக்கு 30 பந்துகளில் 35 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை வீச ஆரம்பிக்க மூன்று சந்தர்ப்பங்களில் ஒரு நிமிடத்துக்கு மேல் எடுத்துக்கொண்டதால் ஐக்கிய அமெரிக்காவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக 16ஆவது ஓவர் ஆரம்பமானபோது இந்தியாவின் மொத்த எண்ணிக்கைக்கு 5 அபராத ஓட்டங்கள் சேர, அதன் வெற்றிக்கு தேவைப்பட்ட இலக்கு 30 பந்துகளில் 30 ஓட்டங்களாக குறைந்தது.
இறுதியில் 10 பந்துகள் மீதம் இருக்க இந்தியா 7 விக்கெட்களால் ஐக்கிய அமெரிக்காவை வெற்றிகொண்டது.
நிறுத்தக் கடிகார விதி தொடர்பாக பதில் அணித் தலைவர் ஆரோன் ஜோன்ஸிடம் கள மத்தியஸ்தர் போல் ரைபல் தெளிவு படுத்தினார்.
வழமையான அணித் தலைவர் மொனான்க் பட்டேல் உபாதைக்குள்ளானதால் ஆரோன் ஜோன்ஸ் பதில் அணித் தலைவராக செயற்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM