கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 190வது வருடாந்த திருவிழா இன்று (13) வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா கடந்த 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கடந்த 9 நாட்கள் நவநாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன், திவ்ய நற்கருணை நாதர் ஆராதனை நேற்றைய தினம் (12) கொழும்பு மறை மாவட்ட பேராயர் அதிவண. மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இன்று அதிகாலை 4 மணி மற்றும் 6 மணிக்கு தமிழ் மொழியிலும், 5 மணி மற்றும் 7 மணிக்கு சிங்கள மொழியிலும் திருவிழா திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
மேலும் காலை 8 மணிக்கு தமிழ் மொழியிலும், முற்பகல் 10 மணிக்கு சிங்கள மொழியிலும், நண்பகல் 12 மணிக்கு ஆங்கில மொழியிலும் ஆயர்கள் தலைமையில் கூட்டுத் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.
தொடர்ந்து, மாலை 5 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி ஆரம்பமாகும்.
அதன் பின்னர், ஆசிர்வாத வழிபாடுகள் நடத்தப்பட்டு, இரவு 8 மணியளவில் நற்கருணை நாதர் ஆசிர்வாதமும் புனித அந்தோனியாரின் ஆசிர்வாதமும் நடைபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM