கெய்லுக்கு முழு உலகமும் தடை விதிக்க வேண்டும்- இயன் செப்பல்

By Robert

10 Jan, 2016 | 11:13 AM
image

பெண் நிருபரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்லுக்கு உலகம் முழுவதும் கிரிக்கெட் விளையாட தடை விதிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான இயன் செப்பல் வலியுறுத்தியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஸ் டி20 உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் ரெனிகேட்ஸ் அணிக்காக அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் விளையாடி வருகிறார். மெல்பேர்னில் நடைபெற்ற போட்டியொன்றின்போது பேட்டியளித்த அவர் தொலைக்காட்சி பெண் நிருபரொருவரிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார்.

கெய்லின் செயலை கண்டித்த போட்டி அமைப்பாளர்கள் அவருக்கு 10ஆயிரம் அவுஸ்திரேலியா டொலர் அபராதம் விதித்தனர். இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இயன் செப்பல் பெண்களிடம் அநாகரிகமாக நடப்பது கெய்லுக்கு வாடிக்கையாகிவிட்டது என்றார்.

இனிமேல் அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாட கெய்லை அனுமதிக்க கூடாது என அந்நாட்டு கிரிக்கெட் சபையிடம் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் உலகம் முழுவதும் விளையாட கெய்லுக்கு தடை விதிக்க அவுஸ்திரேலியா பரிந்துரைப்பதும் அதனை ஏற்று ஐ.சி.சி. நடவடிக்கை எடுப்பதும் தவறில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right