நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த தபால் ஊழியர் சங்கத்தினர் சுகவீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
அதன்படி இன்று (13) வியாழக்கிழமை நள்ளிரவு வரை நுவரெலியா தபால் நிலைய ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இப்பணிப் புறக்கணிப்பு காரணமாக நுவரெலியா பிரதான தபால் நிலையத்தின் ஊடாக விநியோகிக்க கூடிய தபால்கள் பொதியிடப்பட்ட நிலையில் ஓரங்கட்டப்பட்டுள்ளன.
தபால் நிலையங்களைப் பாதுகாக்கவும், தபால் ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து நுவரெலியா பிரதான தபால் நிலைய ஊழியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில் நுவரெலியா தபால் நிலையத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதி முத்திரை வழங்கும் பிரிவு மற்றும் பதிவு தபால் பாரமேற்கும் பிரிவுகள் மாத்திரம் இயங்குகின்றன.
இதற்கென மூன்று அதிகாரிகள் மாத்திரம் கடமையில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM