கம்பஹா, ஜா - எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போலி நாணயத்தாள் மற்றும் போலி ஆவணங்களுடன் சந்தேக நபரொருவர் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
களனி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா, ஜா - எல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 5,000 ரூபா போலி நாணயத்தாள், 11 இறப்பர் முத்திரைகள் , போலி தேசிய அடையாள அட்டைகள் , போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, சந்தேக நபர் ஜா - எல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஜா - எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM