பருத்திதுறை அண்மித்த கடற்பரப்பில் வைத்து, 16 கோடியே 20 இலட்சம் ரூபா பெறுமதியான 13.5 கிலோகிராம் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருளுடன், இந்தியர்கள் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பியல் டீ சில்வா தெரிவித்தார். 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,

அடுத்த கட்ட விசாரணைக்காக குறித்த போதைப் பொருள் தொகையும், சந்தேகநபர்களும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த படகில் இந்திய தேசிய கொடியின் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.