ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய இளைஞர் மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் “தீர்வுக்கு பலம்;” என்ற தொனிப்பொருளில் இன்று நண்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதல் பிரதம அதிதியாகக்  கலந்து கொள்ள உள்ளார். 

நாடெங்கிலும் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தி 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய இளைஞர் மாநாடு இம்முறை 13 வருடங்களின் பின்னர் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.