மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டி நியூஸிலாந்துக்கு தீர்மானமிக்கது

Published By: Vishnu

13 Jun, 2024 | 01:48 AM
image

(நெவில் அன்தனி)

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தனது முதலாவது போட்டியில் தோல்வி அடைந்த நியூஸிலாந்து சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணத்தில் தனது இரண்டாவது போட்டியில் முன்னாள் சம்பியன் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்த்தாடவுள்ளது.

இப் போட்டி இலங்கை நேரப்படி வியாழக்கிழமை (13) காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெற்றால் நான்காவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெறும் அதேவேளை நியூஸிலாந்தின் சுப்பர் 8 சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும்.

எனவே இன்றைய போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி தனது சுப்பர் சுற்று வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொள்ள நியூஸிலாந்து கடுமையாக முயற்சிக்கும்.

2015க்குப் பின்னர் உலகக் கிண்ணப் போட்டிகளில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி வந்துள்ள நியூஸிலாந்து சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத்தில் 2015, 2019, 2023 ஆகிய வருடங்களிலும் ரி20 உலகக் கிண்ணத்தில் 2016, 2021, 2022 ஆகிய வருடங்களிலும் அரை இறுதிவரை முன்னேறியிருந்தது. அவற்றில் 3 சந்தர்ப்பங்களில் இறுதி ஆட்டத்தில் விளையாடியபோதிலும் சம்பியன் பட்டத்தை சூடவில்லை.

ஆனால், இந்த வருடம் தனது ஆரம்பப் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் 84 ஓட்டங்களால் தோல்வி அடைந்த நியூஸிலாந்து முதல் சுற்றுடன் வெளியேறிவிடுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது.

எனவே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டி நியூஸிலாந்துக்கு கிட்டத்தட்ட நொக் அவுட் போட்டியாக அமையவுள்ளது.

இதன் காரணமாக நியூஸிலாந்து என்ன விலை கொடுத்தேனும் வெற்றி பெறுவதற்கு முயற்சிக்கும்.

மறுபுறத்தில் சுப்பர் 8 சுற்றில் விளையாடுவதை உறுதி செய்துகொள்வதற்காக மேற்கிந்தியத் தீவுகளும் வெற்றிக்காக முயற்சிக்கும்.

இதன் காரணமாக இந்தப் போட்டி கடைசிவரை விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

இந்த இரண்டு  அணிகளும்   சந்தித்துக்கொண்ட  19 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் நியூஸிலாந்து 10 - 4 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. 3 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்ததுடன் 2 போட்டிகளில் முடிவு கிட்டவில்லை.

இந்த இரண்டு அணிகளும் ஒரே ஒரு தடவை ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பல்லேகலையில் 2012இல் சந்தித்துக்கொண்டபோது அப் போட்டி சமநிலையில் முடிவடைந்தது. ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் சுப்பர் ஓவரில் வெற்றி பெற்றிருந்தது.

அணிகள்

மேற்கிந்தியத் தீவுகள்: ப்றண்டன் கிங், ஜோன்சன் சார்ள்ஸ், நிக்கலஸ் பூரன், ரொஸ்டன் சேஸ், ரோவ்மன் பவல் (தலைவர்), ஷேர்ஃபேன் ரதஃபர்ட், அண்ட்றெ ரசல், ரொமாரியோ ஷெப்பர்ட், அக்கீல் ஹொசெய்ன், அல்ஸாரி ஜோசப், குடாகேஸ் மோட்டி.

நியூஸிலாந்து: ஃபின் அலன், டெவன் கொன்வே, கேன் வில்லியம்சன் (தலைவர்), டெரில் மிச்செல், க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷாம், மைக்கல் ப்றேஸ்வெல், மிச்செல் சென்ட்னர், இஷ் சோதி, லொக்கி ஃபேர்கசன், ட்ரென்ட் போல்ட்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41
news-image

மும்பை இண்டியன்ஸ் இரண்டாவது தடவையாக சம்பியனானது...

2025-03-16 14:24:50
news-image

இரண்டாவது மகளிர் ரி20யில் இலங்கையை வென்ற...

2025-03-16 12:15:58
news-image

சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு -...

2025-03-16 03:29:57
news-image

கண்டியை விட 265 ஓட்டங்கள் முன்னிலையில்...

2025-03-16 03:20:50
news-image

சிட்னி ட்ரக் க்ளசிக்: உலக மெய்வல்லுநர்...

2025-03-16 00:05:00
news-image

சென் தோமஸ் அணியை 4 விக்கெட்களால்...

2025-03-15 23:59:55
news-image

49ஆவது தேசிய விளையாட்டு விழா நகர்வல...

2025-03-15 20:54:13
news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36