மொனராகலை ,எத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரஅத்துபிட்டிய வாவியில் தாமரை பூ பறிக்கச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக எத்திமலை பொலிஸார் தெரிவித்தனர்.
மொனராகலை ,எத்திமலை பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய மாணவரொருவரே உயிரிழந்துள்ளார்.
இந்த மாணவன் பாடசாலை நிறைவடைந்த நிலையில், தனது மூன்று நண்பர்களுடன் இணைந்து தாமரை பூ பறிப்பதற்காக தொரஅத்துபிட்டிய வாவிக்கு சென்றுள்ளார்.
இதன்போது இந்த மாணவன் வாவிக்கு அருகில் இருந்த கிணற்றில் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், மாணவன் நீண்ட நேரமாகியும் பாடசாலையில் இருந்து வீடு திரும்பாததால் மாணவனின் பெற்றோர் மாணவனைத் தேடிச் சென்றுள்ளனர்.
இதன்போது, மாணவனின் அயல் வீட்டில் வசிப்பவர்கள் இந்த மாணவன் சக மாணவர்களுடன் இணைந்து தொரஅத்துபிட்டிய வாவியை நோக்கிச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த மாணவனின் பெற்றோர் வாவிக்குச் சென்று தேடி ப் பார்த்த போது மாணவன் அங்குள்ள கிணற்றில் வீழ்ந்திருப்பதைக் கண்டுள்ளனர்.
இதனையடுத்து, மாணவன் எத்திமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM