bestweb

நடிகர் காளி வெங்கட் நடிக்கும் 'தோனிமா'

Published By: Digital Desk 7

12 Jun, 2024 | 03:13 PM
image

தமிழ் திரையுலகின் சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற நற்பெயரை சம்பாதித்திருக்கும் நடிகர் காளி வெங்கட் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தோனிமா' எனும் திரைப்படத்தில், அவர் கோடி எனும் பொறுப்பற்ற குடும்பத் தலைவர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் ஜெகதீசன் சுப்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தோனிமா' எனும் திரைப்படத்தில் காளி வெங்கட், ரோஷினி பிரகாஷ், விவேக் பிரசன்னா, கண்ணன் பொன்னையா, ராஜேஷ் ஷர்மா, பி. எல். தேனப்பன், கல்கி ராஜன், 'ஆடுகளம்' ராஜாமணி, விசித்திரன், சசி, சுஜாதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாக்கியராஜ் மற்றும் சஜித் குமார் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜான்சன் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை தயாரிப்பாளர் சாய் வெங்கடேஸ்வரன் தயாரித்திருக்கிறார். எஸ் பி ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ் பி ராஜா சேதுபதி இப்படத்தை வழங்குகிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த குடும்பத்தில் நிகழும் நாளாந்த வாழ்வியலை மையப்படுத்தி இத்திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. தனம் எனும் குடும்பத் தலைவி கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி பிரகாசம், கோடி எனும் பொறுப்பற்ற குடும்ப தலைவர் கதாபாத்திரத்தில் நடிகர் காளி வெங்கட்டும் நடித்திருக்கிறார்கள். இந்தத் தம்பதிகளின் வாரிசுக்கு உடல் நலக் குறைபாடு ஏற்படுகிறது. கடினமான சூழலை இந்த தம்பதிகள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்பதை யதார்த்தமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தைப் படமாளிகையில் பார்த்து ரசிக்கும் ரசிகர்களுடன் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்