ஒடிசா மாநிலத்திற்கு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதால் அக்கட்சியை சேர்ந்த மோகன் சரண் மாஜி முதல்வராக தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சியின் மேலிடம் அறிவித்திருக்கிறது.
ஒடிசா சட்டப்பேரவை பொது தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 78 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து மாநில முதல்வரை தேர்ந்தெடுக்கும் கூட்டம் தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்றது. இதில் பாஜக கட்சியின் மேலிட பிரதிநிதியாக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் புபேந்தர் யாதவ் ஆகியோர் பங்கு பற்றினர். பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு கட்சியின் முதல்வராக மோகன் சரண் மாஜி தெரிவு செய்யப்பட்டார். துணை முதல்வராக கே வி சிங் தியோ மற்றும் பிரவாதி பரிதா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதாகவும் அவர்கள் அறிவித்தனர்.
புதிய முதல்வராக பொறுப்பேற்கும் மோகன் சரண் மாஜி பழங்குடி இனத்தை சேர்ந்தவர் என்பதும், தொடர்ந்து நான்காவது முறையாக சட்டப்பேரவைக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெறும் விழாவில் புதிய முதல்வராக மோகன் சரண் மாஜி பதவியேற்கிறார். இவருக்கு அம்மாநில ஆளுநர் ரகுபர் தாஸ் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அதிதியாக பங்குபற்றுகிறார். மேலும் மத்திய அமைச்சர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள் என பலரும் பங்குபற்றுகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM