நினைத்ததை நடத்தி வைக்கும் ஏலக்காய் தீப பரிகாரம்

Published By: Digital Desk 7

12 Jun, 2024 | 03:14 PM
image

எம்மில் பலரும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பல்வேறு வகையான திட்டங்களை மனதில் உருவாக்கிக் கொண்டிருப்பர். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான கால நிலையையும் உணர்ந்து அதனை திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்தவும் தயங்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தபடி பலன்கள் கிடைத்திருக்காது. இதனால் அவர்கள் மனதளவில் சோர்வடைவர். உடனடியாக சோதிட நிபுணர்களையும், ஆன்மீக பெரியோர்களையும் அணுகி தாங்கள் நினைத்தது நடக்கவில்லை. நடக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என கேட்டிருப்பர். அதற்கு அவர்களும் மிக எளிதாக பின்பற்றக்கூடிய பரிகாரம் ஒன்றை முன்மொழிந்திருப்பர்.

அது ஏலக்காய் தீப வழிபாடு..!

இதற்கு தேவையான பொருட்கள் அகல் விளக்கு++ பசு நெய் அல்லது நல்லெண்ணெய் + ஏலக்காய்கள்.

திங்கட்கிழமையை தெரிவு செய்து கொண்டு, காலையில் நீராடி அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று அங்குள்ள விநாயகப் பெருமானை மனதார வணங்குங்கள். அதன் பிறகு வீட்டிற்கு வருகை தந்து வீட்டில் உள்ள விநாயக பெருமானின் உருவப்படத்திற்கு முன் விளக்கினை ஏற்றுங்கள். பசு நெய் அல்லது நல்லெண்ணெய் மற்றும் திரி உங்களது விருப்பம். அந்த விளக்கில் ஒரு ஏலக்காயை இட வேண்டும்.  விளக்கில் இடுவதற்கும் முன் அந்த ஏலக்காயை உங்களது உள்ளங்கையில் வைத்து, உங்களது கோரிக்கையை விநாயகப் பெருமான் முன் சமர்ப்பணம் செய்யுங்கள்.

அடுத்த நாள் செவ்வாய்க்கிழமையன்று விளக்கில் உள்ள ஏலக்காயை எடுத்து சேகரித்து வைத்த பிறகு, புதிதாக மீண்டும் விளக்கேற்றி இரண்டாவது ஏலக்காயையும் உள்ளங்கையில் வைத்து பிரார்த்தித்து விளக்கில் இடவேண்டும்.

இதேபோல் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு ஏழு ஏலக்காய்களை விளக்கில் இட்டு பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

ஏழாவது நாள் பிரார்த்தனை செய்து நிறைவடைந்தவுடன் இருபத்தியொரு ஏலக்காய்களைக் கொண்டு மாலையாக தொடுத்து அதனை அருகில் உள்ள ஆலயத்திற்கு சென்று விநாயகப் பெருமானை வணங்கி அந்த மாலையை விநாயகப் பெருமானுக்கு சாற்றி விட வேண்டும்.

அதன் பிறகு உங்கள் கைகளில் இருக்கும் விளக்கில் இட்ட ஏழு ஏலக்காய்களை அருகில் உள்ள ஓடும் நதியிலோ அல்லது சிவாலயங்களில் உள்ள குளங்களிலோ விட வேண்டும்.

விநாயகப் பெருமானிடம் தொடர்ச்சியாக ஏழு நாட்களில் ஒரே கோரிக்கையை முன்வைத்து பிரார்த்தனை செய்தால் அவை உடனடியாக நிறைவேறும் என்பது பல பக்தர்களின் அனுபவத்தில் கண்ட உண்மையாகும். இதனை நீங்களும் செய்து உங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் மற்றவர்களுக்கும் எடுத்துரைக்கலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்