(நெவில் அன்தனி)
ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடைபெற்றுவரும் 9ஆவது ஆடவர் ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானின் தலைவிதியைத் தீர்மானிக்கவுள்ள இந்திய - ஐக்கிய அமெரிக்க அணிகளுக்கு இடையிலான ஏ குழு போட்டி நியூ யோர்க் நசவ் கவுன்டி விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இந்தப் போட்டி எந்தளவு முக்கியமோ அதனைவிட பாகிஸ்தானுக்கு மிக முக்கிய போட்டியாக இது அமையவுள்ளது.
இப் போட்டியில் வெற்றிபெறும் அணி சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெறும் என்பதால் இந்தியாவும் ஐக்கிய அமெரிக்காவும் வெற்றியைக் குறிவைத்து விளையாடவுள்ளன.
ஒருவேளை, இந்தப் போட்டி மழையினால் கழுவப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டால் ஏ குழுவிலிருந்து இந்தியாவும் ஐக்கிய அமெரிக்காவும் சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெறும். அத்துடன் பாகிஸ்தான் முதல் சுற்றுடன் வெளியேறும்.
முன்னாள் சம்பியன் இந்தியா தனது முதல் இரண்டு போட்டிகளில் அயர்லாந்தையும் பாகிஸ்தானையும் வெற்றிகொண்டிருந்தது. ஐக்கிய அமெரிக்கா தனது இரண்டு போட்டிகளில் கனடாவை 7 விக்கெட்களாலும் பாகிஸ்தானை சுப்பர் ஓவரிலும் வெற்றிகொண் டிருந்தது .
ஆனால், பாகிஸ்தானை வீழ்த்திய மொனான்க் பட்டேல் தலைமையிலான ஐக்கிய அமெரிக்கா, இன்றைய போட்டியில் இந்தியாவை வெற்றிகொள்ளும் என எதிர்பார்க்க முடியாது.
இன்னும் நான்கு வருடங்களில் லொஸ் ஏஞ்சலிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் மீண்டும் கிரிக்கெட் சேர்த்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் இன்றைய போட்டியில் ஐக்கிய அமெரிக்கா எதையாவது சாதிக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை இந்தப் போட்டியில் ஐக்கிய அமெரிக்கா வெற்றி பெற்றால் அது முழு உலக கிரிக்கெட் வரலாற்றிலும் மிகப் பெரிய தலைகீழ் முடிவாக பதிவாகும்.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் விசித்திரமான விளையாட்டு என்பதால் இன்றைய போட்டியில் எதுவும் நிகழலாம் என்ற கருத்து நிலவுகிறது. என்றாலும் ஐக்கிய அமெரிக்கா வெற்றிபெறுவது சாத்தியப்படாது என்ற அபிப்பிராயமே அதிகமாக இருந்துவருகிறது.
எது எவ்வாறாயினும் இந்தப் போட்டி முடியும்வரை பரபரப்பின் விளிம்பில் பாகிஸ்தான் இருப்பது நிச்சயம்.
அணிகள்
இந்தியா: ரோஹித் ஷர்மா (தலைவர்), விராத் கோஹ்லி, ரிஷாப் பான்ட், சூரியகுமார் யாதவ். ஷிவம் டுபே, ஹார்திக் பாண்டியா, ரவிந்த்ர ஜடேஜா, அக்சார் பட்டேல், ஜஸ்ப்ரிட் பும்ரா, மொஹமத் சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
ஐக்கிய அமெரிக்கா: ஸ்டீவன் டெய்லர், மொனான்க் பட்டேல் (தலைவர்), அண்ட்றீஸ் கௌஸ், ஆரோன் ஜோன்ஸ், நிட்டிஷ் குமார், கோரி அண்டர்சன், ஹார்மீத் சிங், ஜஸ்தீப் சிங், நொஸ்துஷ் கெஞ்சிகே, சௌராப் நேத்ரவோல்கர், அலி கான்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM