சட்ட விரோத, சமூக விரோத செயல்களின் எண்ணங்களுக்கு உருவம் கொடுக்கும் 'பயமறியா பிரம்மை'

Published By: Digital Desk 7

12 Jun, 2024 | 02:46 PM
image

நடிகர் ஜேடி கதையின் நாயகர்களில் ஒருவராக அழுத்தமான வேதத்தில் நடித்திருக்கும் 'பயமறியா பிரம்மை' எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான விஜய் அண்டனி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் ராகுல் கபாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பயமறியா பிரம்மை' எனும் திரைப்படத்தில் ஜேடி, குரு சோமசுந்தரம், ஹரிஷ் உத்தமன், ஜான் விஜய், வினோத் சாகர், சாய் பிரியங்கா ரூத், விஸ்வாந்த், ஹரிஷ், திவ்யா கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

நந்தா மற்றும் பிரவீண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை 69 எம் எம் ஃபிலிம் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரில் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் வல்லவர்களின் வல்லாதிக்க சக்திகளுக்கு கீழ்ப்படிந்து தண்டனை பெறும் போது பாதிக்கப்பட்டவர்களின் மனதில் அவர்களை கொலை செய்து விட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும். 

இது போன்ற சமூக விரோத மற்றும் சட்ட விரோத செயல்களின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் இப்படத்தின் கதை அமைந்திருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடகர் அறிவு எழுதி, பாடி, இசையமைத்திருக்கும்...

2024-07-19 17:36:22
news-image

மாரி செல்வராஜின் பறவை- முத்தம்- 'வாழை'

2024-07-19 17:37:34
news-image

ஹிப் ஹொப் தமிழா ஆதி நடிக்கும்...

2024-07-19 17:37:47
news-image

தீபாவளிக்கு வெளியாகும் சிவ கார்த்திகேயனின் 'அமரன்'

2024-07-19 17:38:29
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தில்...

2024-07-19 16:08:59
news-image

மெய்யழகன்' கார்த்தியின் சந்தை மதிப்பை உயர்த்துமா..!?

2024-07-19 16:16:10
news-image

கிறாபிக்ஸ் காட்சிகளுடன் அசத்தும் 'சதுர்'

2024-07-19 16:17:08
news-image

படப்பிடிப்புடன் தொடங்கிய நடிகர் காளி வெங்கட்டின்...

2024-07-19 16:17:47
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- சூரி...

2024-07-17 17:00:23
news-image

தனுஷ் இறங்கி செய்திருக்கும் தரமான சம்பவம்...

2024-07-17 16:53:47
news-image

தூய்மை பணியாளர்களின் உணர்வெழுச்சியை பேசும் ''நாற்கர...

2024-07-17 16:26:31
news-image

தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் 'றெக்கை முளைத்தேன்'...

2024-07-17 16:17:14