கொழும்பில் 'கம்பன் விழா 2024' நிகழ்வுகள் ஜூன் 14ல் ஆரம்பம் 

13 Jun, 2024 | 05:23 PM
image

கில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் 'கம்பன் விழா 2024' கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் எதிர்வரும் ஜூன் 14, 15, 16, 17 ஆகிய திகதிகளில் காலை 9.30 மணி மற்றும் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 

தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நடைபெறும் கம்பன் விழாவில் பங்கேற்க இலங்கை மற்றும் தென்னிந்திய அறிஞர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர். 

அந்த வகையில், அகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர் கம்பவாரிதி இ. ஜெயராஜ், அகில இலங்கை கம்பன் கழக அறக்கட்டளை தலைவர் டாக்டர் கு. ஸ்ரீஇரத்தினகுமார், கொழும்பு கம்பன் கழகத்தின் பெருந்தலைவர் ஜெ. விஸ்வநாதன், கொழும்பு கம்பன் கழகத் தலைவர் ஈ. கணேஷ் தெய்வநாயகம் ஆகியோரின் முன்னிலையில் இவ்விழா நிகழவுள்ளது. 

சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள தமிழ்நாட்டின் கோவிலூர் ஆதீன கர்த்தர் நாராயண ஞானதேசிக சுவாமிகள், மலேசியாவின் முன்னாள் அமைச்சரும் அந்நாட்டின் பாராளுமன்ற உறுப்பினருமான 'டத்தோஸ்ரீ' எம்.சரவணன், புதுச்சேரி சட்டசபை முன்னாள் சபாநாயகர் வி.பி. சிவக்கொழுந்து ஆகியோர் நிகழ்வுக்கு வருகைதரவுள்ளனர். 

நான்கு நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் கம்பன் விழா இலக்கிய கள நிகழ்வுகளில் இந்தியாவிலிருந்து பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, வழக்கறிஞர் கே.சுமதி, முனைவர் பாரதி கிருஷ்ணகுமார், 'கவிச்சுடர்' கவிதைப்பித்தன், 'இலக்கியச் சுடர்' த. இராமலிங்கம், முனைவர் இரா.மாது ஆகியோர் பங்கெடுத்து சிறப்பிக்கவுள்ளனர். 

முதல் நாளான 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நிகழ்வில் சிவாலயம் ஜெ.மோகன் (தமிழ்நாடு), சங்கீதபூஷணம் பொன்.ஸ்ரீவாமதேவன், பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, கவிஞர் மேமன் கவி, கிரிக்கெட் வீரர் வி.வியாஸ்காந்த் ஆகியோர்  அறக்கட்டளை விருதுகள் வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர். 

அத்தோடு, அன்றைய தினம் இரண்டு பாகங்களாக 'கம்ப இராமாயணம்' முழுப்பதிப்பும் வெளியிடப்படவுள்ளன. அவற்றின் முதல் பிரதிகளை 'இலக்கியப்புரவலர்' அல்ஹாஜ் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்வார். 

கம்பன் விழா இறுதி நாளான 17ஆம் திகதி திங்கட்கிழமை நிகழ்வில் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சண்முகம் ஸ்ரீதரன், தமிழறிஞர் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், வட மாகாணத்தின் பிரதம செயலாளர் லட்சுமணன் இளங்கோவன், இலங்கை தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் விருது வழங்கி கெளரவிக்கப்படவுள்ளனர். 

மேலும், நாட்டிய அரங்கம், விவாத அரங்கு, கவியரங்கு, நாடக அரங்கு, கருத்தரங்கு, பட்டி மண்டபம், சிந்தனை அரங்கு, வழக்காடு மன்றம், விருது வழங்கல், சான்றோர் கெளரவம் என பல்வேறு கலை, இலக்கிய நிகழ்வுகள் கம்பன் விழாவினை அலங்கரிக்கவுள்ளன. 

நிகழ்வுகள் பற்றிய முழு விபரங்கள் இதோ.... 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மடு தம்பனைக்குளத்தில் ஆடிப்பிறப்பு விழா

2024-07-18 18:29:54
news-image

தலவாக்கலை புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய...

2024-07-18 15:24:47
news-image

ஆடிவேல் விழாவை முன்னிட்டு ஜிந்துபிட்டி சிவசுப்பிரமணிய...

2024-07-18 13:40:33
news-image

கட்டைபறிச்சான் அம்மச்சி அம்மன் ஆலயத்தில் பரிகல...

2024-07-18 13:16:40
news-image

iDealz Prime கையடக்கத்தொலைபேசி காட்சியறை திறப்பு...

2024-07-17 17:05:58
news-image

யாழ். மாவட்ட செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழா  

2024-07-17 17:07:04
news-image

யாழில் நவாலியூர் சோமசுந்தரப் புலவரை போற்றும்...

2024-07-17 16:42:21
news-image

வவுனியாவில் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம்!

2024-07-17 14:10:02
news-image

அகில இலங்கை ஆனந்த ஐயப்பன் தேவஸ்தான...

2024-07-17 14:42:44
news-image

ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கேளுங்கள் !

2024-07-17 09:46:14
news-image

பல்துறை ஆற்றல் கொண்ட மன்னார் அமுதன்...

2024-07-16 21:19:37
news-image

அரச நிதி முகாமைத்துவம் மற்றும் இலங்கையின்...

2024-07-16 13:08:55