இலங்கை ஒருகாலத்தில் செய்தது போல இஸ்ரேல் பாதுகாப்பு வலயங்களை கொலைக்களமாக மாற்றியுள்ளது -

Published By: Rajeeban

12 Jun, 2024 | 10:58 AM
image

Neve Gordon and Nicola Perugini

/www.aljazeera.com

அனைவரினதும் கவனமும் ரபாவின் மேல் காணப்பட்ட வேளை, இஸ்ரேல் காசாவின் தென்பகுதியில் உள்ள சிறிய பகுதியை பாதுகாப்பான மனிதாபிமான வலயம் என மே 22 ம் திகதி அறிவித்துவிட்டு நான்கு நாட்களின் பின்னர் அந்த பகுதி மீது குண்டுதாக்குதலை மேற்கொண்டது.

இஸ்ரேல் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது மேற்கொண்ட தாக்குதில் 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம்,15 வருடத்திற்கு முன்னர் இலங்கையின் உள்நாட்டுபோரின் இறுதி தருணங்களில் பொதுமக்களின் அவலநிலையை விவரிக்கும் இரகசிய கேபிள்களை விக்கிலீக்ஸ் இடைமறித்த வேளை தெரியவந்த விபரங்களை நினைவுபடுத்துகின்றன.

2009 மே மாதம் கொழும்பில் உள்ள  அமெரிக்க தூதரகத்திலிருந்து அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட கேபிள்கள் பாதுகாப்பு வலயத்தில்  சிக்குண்டுள்ள ஏழு கத்தோலிக்க மதகுருமார்களை காப்பாற்றுவதற்காக அமெரிக்க தூதரகம் தலையிடவேண்டும் என மன்னார் ஆயர் எவ்வாறு வேண்டுகோள் விடுத்தார் என்பதை தெரிவிக்கின்றன.

இந்த பகுதியை பொதுமக்கள் தங்குவதற்கான பாதுகாப்பான இடம் என இலங்கை இராணுவம் அறிவித்திருந்தது.

குறிப்பிட்ட பகுதிக்குள் 60,000 முதல் 70,000 வரையிலான பொதுமக்கள் சிக்குண்டிருந்தனர் என மன்னார் ஆயர் மதிப்பிட்டிருந்தார்.

இது மான்கட்டனின் மத்திய பூங்காவை விட இரண்டு மடங்கு பெரிய பகுதி,அழகிய கடற்கரை பகுதியில் அமைந்திருந்தது.

ஆயர் தன்னை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டதை தொடர்ந்து அமெரிக்க தூதுவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சரை தொடர்புகொண்டார், பாதுகாப்பு வலயத்தில் சிக்கியுள்ளவர்களில் அனேகமானவர்கள் பொதுமக்கள் என இலங்கை இராணுவத்தினருக்கு உடனடியா தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.இலங்கை இராணுவம் மேற்கொண்டுள்ள கடும் ஆட்டிலறி தாக்குதல்கள் காரணமாக குறிப்பிட்ட பகுதி பொதுமக்களின் மரணப்பொறியாக மாறக்கூடும் என அமெரிக்க தூதுவர் அச்சமடைந்திருந்தார்.

காசா பள்ளத்தாக்கிலிருந்து பொதுமக்களை ரபாவின் மனிதாபிமான வலயத்திற்குள் வரச்செய்வதற்கான இஸ்ரேலிய இராணுவத்தின் முயற்சிகளை போல அல்லாமல் ,ஒரு கட்டத்தில் இலங்கை இராணுவம் விமானங்கள் மூலம் துண்டுபிரசுரங்களை வீசுவதன் மூலமும் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பதன் மூலம் பொதுமக்களை  பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட இடத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டது.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த 330,000 மக்கள் இந்த பகுதிகளிற்கு சென்றனர், ஐநா தற்காலிக முகாம்களை உருவாக்கியதுடன் பல மனிதாபிமான அமைப்புகளுடன் இணைந்து மிகவும் நெருக்கடியான நிலையிலிருந்த மக்களிற்கு உணவையும் மருந்தையும் வழங்க ஆரம்பித்தது.

இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக போரிட்ட தமிழ் புலிகள் என்ற ஆயுத அமைப்பும் இந்த பகுதிகளிற்குள் பின்வாங்கியது போல உள்ளது.போராளிகள் மிகவும் நவீனமான தொடர் பதுங்குழிகளை பாதுகாப்பு அரண்களை இந்த பகுதியில் அமைத்திருந்தனர்,அங்கு இராணுவத்திற்கு எதிரான தமது இறுதி தாக்குதலை மேற்கொண்டனர்.

இலங்கை இராணுவம் தான் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் பொதுமக்களை மீட்டதாகவும் தெரிவித்தாலும் செய்மதிi படங்களை ஆய்வு செய்தவேளையும்,நேரில் பார்த்தவர்கள் பலரின் பெருமளவு சாட்சியங்களும் பாதுகாப்பு வலயம் என தெரிவிக்கப்படுவதன் மீது இலங்கை இராணுவம்மோட்டர்கள் ஆட்டிலறிகளை பயன்படுத்தி  தொடர்ச்சியான மிகக்கடுமையான தாக்குதலை மேற்கொண்டதையும் அந்த பகுதியை கொலைகளமாக மாற்றியதையும் வெளிப்படுத்தியுள்ளன.

பாதுகாப்பு வலயங்கள் என தெரிவிக்கப்படும் அந்த பகுதிகளில் சிக்குண்டிருந்த பத்தாயிரம் முதல் நாற்பதினாயிரம் வரையிலான பொதுமக்கள் அழிக்கப்பட்டனர்,மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.

அனைத்து தற்காலிக அல்லது நிரந்தர வைத்தியசாலைகளும் ஆட்டிலறி தாக்குதலிற்கு உட்பட்டதால் காயமடைந்தவர்கள் உரிய மருத்துவ வசதிகள் இன்றி பல மணித்தியாலங்கள்- நாட்களிற்கு காத்திருக்கவேண்டிய நிலை காணப்பட்டது.

இலங்கை 2009க்கும் காசா 2024ம் ஆண்டிற்கும் இடையிலான சமாந்திரங்கள் விசித்திரமானவை.

இரண்டு சந்தர்ப்பங்களிலும் பாதுகாப்பு வலயங்கள் என அறிவித்துவிட்டு இரண்டு நாட்டின் இராணுவங்களும் அவற்றின் மீது தாக்குதலை மேற்கொண்டன, கண்மூடித்தனமாக ஏராளமான பொதுமக்களை கொலை செய்தன,காயப்படுத்தின.

பொதுமக்களை காப்பாற்றுவதற்கான மருத்துவபிரிவுகள் மீது இரண்டு சந்தர்ப்பத்திலும் தாக்குதல் இடம்பெற்றது.

இரண்டு சந்தர்ப்பத்திலும் இராணுவபேச்சாளர்கள் தங்கள் தாக்குதல்களை நியாயப்படுத்தினர்,பாதுகாப்பு வலயங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டதை  ஏற்றுக்கொண்ட அவர்கள் ,ஹமாசும்; தமிழ் புலிகளும் பொதுமக்கள் மத்தியிலிருந்தனர் அவர்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினர்  என தெரிவித்தனர்.

இரண்டு சந்தர்ப்பங்களிலும் மேற்குலக நாடுகள் அப்பாவிபொதுமக்கள் கொல்லப்பட்டதை கண்டித்தன,எனினும் இரண்டு நாடுகளினதும் இராணுவங்களிற்கும் ஆயுதங்களை வழங்கி தொடர்ந்து ஆதரித்தன.

இலங்கையை பொறுத்தவரை அந்த நாட்டிற்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று.

இரண்டு சூழ்நிலைகளிலும் மோதலில் ஈடுபட்ட தரப்பினர் யுத்த குற்றங்களில் ஈடுபட்டனர்,மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டனர் என ஐநா தெரிவித்துள்;ளது.

இரண்டு சந்தர்ப்பங்களிலும் தங்களின் படுகொலைகளை நியாயப்படுத்த சர்வதேச சட்ட நிபுணர்களை இரண்டு நாடுகளும் பயன்படுத்தின.

இரண்டு சந்தர்ப்பங்களிற்கு இடையிலும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது.

காசா இனப்படுகொலை இருளில் இடம்பெறவில்லை.

இலங்கையை பொறுத்தவரை உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதற்கும் சுயாதீன விசாரணைகளை மேற்கொள்வதற்கும் நீண்டகாலம் எடுத்தது.

ஆனால் காசாவை பொறுத்தவரை சர்வதேச கவனமும்,கருப்பு  2371 இல் தலைதுண்டிக்கப்பட்ட குழந்தைகளினதும் கரிய உடல்களினதும் படங்களும்  ( நேரடியாக ஒலிபரப்பானவை) இலங்கையின் நிகழ்ந்த கொடுரங்கள் மீண்டும் நிகழ்வதை தடுக்க முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள செயற்கை நுண்ணறிவு...

2024-07-19 17:44:24
news-image

இருண்ட உலகில் 18 வருட போராட்டம்...

2024-07-18 10:54:36
news-image

குழந்தைகள், சிறுவர்களின் எரியுண்ட தசைகளின் மணத்தையும்...

2024-07-17 17:49:49
news-image

வலப்பக்கம் கைகாட்டி, இடப்பக்கம் திரும்பிய பிரெஞ்சு...

2024-07-17 12:19:02
news-image

தொன்மங்களைப் பறிக்கும் பௌத்தம்

2024-07-16 12:49:27
news-image

தகவல் தொழில்நுட்ப கல்வி வளங்களை பயன்படுத்துகிறோமா?

2024-07-16 11:55:46
news-image

வடக்கில் தேர்தல், நல்லிணக்கப் பிரச்சினைகள்

2024-07-16 09:31:33
news-image

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் டிரம்ப் மீது...

2024-07-15 12:27:03
news-image

இலங்கை தமிழர் அரசியல் சமகால வரலாற்றில்...

2024-07-15 11:14:17
news-image

இளைஞர்களுக்கான உத்தரவாதங்கள் இல்லாத கடன்கள்

2024-07-14 17:31:25
news-image

இங்கிலாந்து தேர்தலின் விபரிப்பு

2024-07-14 17:39:59
news-image

சம்பந்தனின் அரசியல் தலைமைத்துவமும் தவறவிடப்பட்ட வாய்ப்புகளும்

2024-07-14 16:39:53