நமிபியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா 2ஆவது அணியாக சுப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தது

12 Jun, 2024 | 10:16 AM
image

(நெவில் அன்தனி)

அன்டிகுவா, நோர்த் சவுண்ட் சேர் விவியன் றிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் சிறிது நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்த பி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் நமிபியாவை 9 விக்கெட்களால் வெற்றி கொண்ட அவுஸ்திரேலியா, 2ஆவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

இடைவேளை உட்பட சுமார் 2 மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்தப் போட்டி 22.4 ஓவர்களில் முடிவுக்கு வந்தது.

இந்தப் போட்டி முடிவுடன் பி குழுவுக்கான அணிகள் நிலையில் 6 புள்ளிகளுடன் அசைக்க முடியாத முதலிடத்தில் அவுஸ்திரேலியா இருக்கிறது.

அடம் ஸம்பாவின் 4 விக்கெட் குவியல், துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி என்பன அவுஸ்திரேலியாவின் வெற்றியை இலகுவாக்கின.

இப் போட்டியில் 4 விக்கெட்களைக் கைப்பற்றிய அடம் ஸம்ப்பா, ஆடவர்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்களை வீழ்த்திய முதலாவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

ஏற்கனவே மகளிர் ரி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்களைப் பூர்த்தி செய்த தனது சக நாட்டு வீராங்கனைகள் மெகா ஷூட், எலிஸ் பெரி ஆகியோருடன் 3ஆவது அவுஸ்திரேலியராக ஸம்ப்பா இணைந்துகொண்டுள்ளார்.

நமீபியாவை 72 ஓட்டங்களுக்கு சுருட்டிய பின்னர் அவுஸ்திரேலியா 5.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்று இலகுவாக வெற்றிபெற்றது.

ட்ரவிஸ் ஹெட் 34 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

டேவிட் வோர்னர் 20 ஓட்டங்களைப் பெற்றார்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய நமிபியா 17 ஓவர்களில் சகல விக்கெட்களையம் இழந்து 72 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 36 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆரம்ப வீரர் மைக்கல் வென் லிங்கென் 10 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர்கள் இருவரைவிட வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெறவில்லை.

பந்துவீச்சில் அடம் ஸம்ப்பா 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மாக்கஸ் ஸ்டொய்னிஸ் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜொஷ் ஹேஸ்ல்வூட் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்: அடம் ஸம்ப்பா 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். மெய்வல்லுநர்கள் இருவர் உட்பட 10...

2024-07-20 01:04:53
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2024-07-19 20:45:59
news-image

அகில இலங்கை பாடசாலைகள் நீச்சல் போட்டியில் ...

2024-07-19 16:06:50
news-image

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு...

2024-07-19 14:47:26
news-image

ஆர்ஜென்டீனவில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான பிரெஞ்சு...

2024-07-19 15:10:11
news-image

இலங்கை வரும் இந்திய ஒரு நாள்...

2024-07-19 12:00:51
news-image

கண்டி பெல்கன்ஸ் அணிக்கு கைகொடுத்த கமிந்து,...

2024-07-19 01:54:56
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் கோல் மார்வல்ஸ்;...

2024-07-19 01:48:33
news-image

அண்டர்சனுக்கு பதிலாக மார்க் வூட்

2024-07-18 16:17:16
news-image

ஜப்பானிய தேசிய கால்பந்தாட்ட வீரர் பாலியல்...

2024-07-18 16:08:49
news-image

20 வயதுக்குட்பட்ட மத்திய ஆசிய பெண்கள் ...

2024-07-18 15:59:19
news-image

மேற்கு ஆசிய நேரக் கட்டுப்பாடு செஸ்...

2024-07-18 15:54:48