இடைநிலை நுரையீரல் தொற்று பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை !

12 Jun, 2024 | 09:12 AM
image

எம்மில் சிலருக்கு நடை பயிற்சி மேற்கொள்ளும் போதோ அல்லது மாடிப்படிகள் ஏறும் போதோ.. சிறிது தூரம் நடந்தவுடன் மூச்சு திணறல் ஏற்பட்டாலோ அல்லது வறட்டு இருமல் தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு மேல் நீடித்தாலோ உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். ஏனெனில் உங்களுக்கு நுரையீரலின் இடைநிலைப் பகுதியில் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என விவரிக்கிறார்கள்.

மருத்துவ மொழியில் இன்டர்ஸ்டிஸியல் லங் டிஸீஸ் என குறிப்பிடப்படும் இந்த இடைநிலை நுரையீரல் பாதிப்பு .. நுரையீரலில் உள்ள திசுக்களில் ஏற்படும் வீக்கம் அல்லது வடு காரணமாக உண்டாகிறது. இந்த தருணத்தில் நுரையீரல் மற்றும் சுவாசப் பாதையில் நடைபெறும் ரத்த ஓட்டத்தில் போதுமான ஒக்சிஜன் கிடைப்பதில்லை. இதனால் உங்களுடைய சுவாசத் திறன் மற்றும் நுரையீரலின் செயல்பாட்டு திறனில் பாரிய பின்னடைவு ஏற்படுகிறது.

சிலிக்கான் அல்லது அஸ்பெஸ்டாஸ் ஓடு தயாரிப்பு போன்ற தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இத்தகைய நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்படக்கூடும். மேலும் முடக்குவாதம் மற்றும் ஒட்டோ இம்யூன் டிஸீஸ் ஆகியவற்றின் காரணமாகவும் சிலருக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். மேலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு அதற்காக கீமோதெரபி மற்றும் கதிரியக்க சிகிச்சை பெறுபவர்களுக்கும், ஒரு சில மருந்தியல் சிகிச்சைகளின் பக்க விளைவாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும். இதற்கு உரிய தருணத்தில் சிகிச்சை பெறாவிட்டால் நுரையீரலில் அதிக அழுத்தம் ஏற்பட்டு உயிருக்கு அச்சுறுத்தலை உண்டாக்கி விடும்.

மேலே சொன்ன அறிகுறிகள் இருப்பவர்கள் வைத்தியரை சென்று சந்திக்கும்போது அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இந்தத் தருணத்தில் குருதி பரிசோதனை, சிடி ஸ்கேன், எக்கோ கார்டியோகிராம், நுரையீரல் செயல்பாட்டு திறன் பரிசோதனை, நுரையீரல் திசு பரிசோதனை... ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்ள பரிந்துரைப்பர். இதன் முடிவுகளை பொறுத்து உங்களுக்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும். முதலில் நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களால் கண்டறியப்பட்டிருக்கும் பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர்.  இதனைத் தொடர்ந்து ஓக்ஸிஜன் தெரபி எனும் சிகிச்சையை வழங்கி நிவாரணம் தருவர். மேலும் சிலருக்கு நுரையீரல் மீட்பு சிகிச்சை வழங்கி நிவாரணம் அளிப்பர்.  நிவாரண சிகிச்சைகளின் மூலம் முழுமையான தீர்வு கிடைக்காவிடில் நுரையீரல் மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பர்.

வைத்தியர் தீபா செல்வி -  தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புற்று நோயை உண்டாக்குமா மெழுகு திரி...!?

2024-07-11 17:36:54
news-image

இலத்திரனியல் புகைப்பானை புகைப்பது ஆரோக்கியமானதா..?

2024-07-10 17:28:16
news-image

முகப்பரு வடுக்களை அகற்றும் நவீன லேசர்...

2024-07-09 17:43:59
news-image

அக்யூட் மைலோயிட் லுகேமியா எனும் புற்றுநோய்...

2024-07-05 17:10:12
news-image

நான்ஆல்கஹாலிக் ஸ்டீடோஹெபடைடிஸ் எனும் கொழுப்பு கல்லீரல்...

2024-07-05 00:50:06
news-image

ரத்த சர்க்கரையின் அளவு குறித்த பரிசோதனை...

2024-07-03 15:25:15
news-image

பிராங்கியாடிஸிஸ் எனும் மூச்சு குழாய் தளர்வு...

2024-07-02 23:38:44
news-image

உடல் எடை குறைப்பதற்கான நவீன சிகிச்சை

2024-07-01 19:29:59
news-image

மருந்துகளின் பக்க விளைவுப் பாதிப்புக்கும் சிகிச்சை

2024-06-29 16:15:38
news-image

ஹைட்ரோகெபாலஸ் எனும் மூளையில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2024-06-28 17:55:25
news-image

குருதியில் உள்ள சர்க்கரையின் அளவு குறித்த...

2024-06-28 14:20:41
news-image

குமட்டல் உணர்வு, வாந்திக்கு சிகிச்சை எடுக்க...

2024-06-26 17:45:16