கமல்ஹாசன் மிரட்டும் 'கல்கி 2898 ஏ டி' படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

12 Jun, 2024 | 09:14 AM
image

'உலக நாயகன்' கமல்ஹாசன் - பொலிவுட் சுப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் - 'ரெபல் ஸ்டார்' பிரபாஸ் - பொலிவுட் தேவதைகள் தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் 'கல்கி 2898 ஏ டி' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கல்கி 2898 ஏ டி' எனும் திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.  டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். அறிவியல் புனைவு கதை பின்னணியில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் சி. அஸ்வினி தத், ஸ்வப்னா தத், பிரியங்கா தத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் 27 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பட மாளிகையில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. இந்நிலையில் 'கல்கி 2898 ஏ டி' எனும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.‌ இதில் ரசிகர்களை வியக்க வைக்கும் வி எஃப் எக்ஸ் காட்சிகள்- மாஸான எக்சன் காட்சிகள்- உணர்வுபூர்வமான வசனங்கள்- ரசிகர்களின் அபிமானத்திற்குரிய நட்சத்திர கலைஞர்களின் வித்தியாசமான திரை தோன்றல்- ஹொலிவுட் தரத்திலான காட்சி அமைப்பு- என பல அம்சங்கள் இந்த முன்னோட்டத்தில் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right