இலங்கை மகளிர் குழாத்தில் 2 வருடங்களின் பின்னர் சச்சினி நிசன்சலா

Published By: Vishnu

11 Jun, 2024 | 11:15 PM
image

(நெவில் அன்தனி)

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சனிக்கிழமை (16) ஆரம்பமாகவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் இருதரப்பு  கிரிக்கெட்   மற்றும் ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமரி அத்தபத்து தலைமையில் 16 வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக்குழு பெயரிட்டுள்ளது.

சுமார் 2 வருடங்களின் பின்னர் சச்சினி நிசன்சலா மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை குழாத்தில் இடம்பெறும் பெரும்பாலான சிரேஷ்ட வீராங்கனைகள் 30 வயதைக் கடந்தவர்களாவர். ஐவரே 25 வயதுக்குட்பட்டவர்களாவர்.

அவர்களது அனுபவம் இலங்கை அணிக்கு சாதகமான முடிவுகளைப் பெற்றுக் கொடுக்கும் என கருதப்படுகிறது.

இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஜூன் 15, 18, 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இலங்கை குழாம்

விஷ்மி குணரட்ன, ஹன்சிமா கருணாரட்ன, ஹர்ஷித்தா சமரவிக்ரம, ஹாசினி பெரேரா, அனுஷ்கா சஞ்சீவனி, நிலக்ஷிகா சில்வா (அனைவரும் துடுப்பாட்ட வீராங்கனைகள்), சமரி அத்தபத்து (தலைவி), காவிஷா டில்ஹாரி, ஓஷாதி ரணசிங்க (மூவரும் சகலதுறை வீராங்கனைகள்), இனோஷி ப்ரியதர்ஷனி, அச்சினி குலசூரிய, சுகந்திகா குமாரி, உதேஷிகா ப்ரபோதனி, காவ்யா காவிந்தி, சச்சினி நிசன்சலா (அனைவரும் பந்துவீச்சாளர்கள்).

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். மெய்வல்லுநர்கள் இருவர் உட்பட 10...

2024-07-20 01:04:53
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2024-07-19 20:45:59
news-image

அகில இலங்கை பாடசாலைகள் நீச்சல் போட்டியில் ...

2024-07-19 16:06:50
news-image

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு...

2024-07-19 14:47:26
news-image

ஆர்ஜென்டீனவில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான பிரெஞ்சு...

2024-07-19 15:10:11
news-image

இலங்கை வரும் இந்திய ஒரு நாள்...

2024-07-19 12:00:51
news-image

கண்டி பெல்கன்ஸ் அணிக்கு கைகொடுத்த கமிந்து,...

2024-07-19 01:54:56
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் கோல் மார்வல்ஸ்;...

2024-07-19 01:48:33
news-image

அண்டர்சனுக்கு பதிலாக மார்க் வூட்

2024-07-18 16:17:16
news-image

ஜப்பானிய தேசிய கால்பந்தாட்ட வீரர் பாலியல்...

2024-07-18 16:08:49
news-image

20 வயதுக்குட்பட்ட மத்திய ஆசிய பெண்கள் ...

2024-07-18 15:59:19
news-image

மேற்கு ஆசிய நேரக் கட்டுப்பாடு செஸ்...

2024-07-18 15:54:48