காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற வகையில் காரைதீவு இந்து மயானத்தை அண்டிய தோணா முகத்துவாரத்தை செப்பனிடுவது குறித்து பரிசீலிக்க கடற்றொழில் நீரியல் வள துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விசேட பிரதிநிதி செவ்வாய்க்கிழமை (11) காலை கள விஜயம் மேற்கொணடார்.
காரைதீவை சேர்ந்த பொதுநல செயற்பாட்டாளரும், ஓய்வு நிலை பிரதி அதிபருமான சுந்தரம் தில்லையம்பலம் தொலைபேசியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலான கவனத்துக்கு தோணா முகத்துவாரத்தை செப்பனிட வேண்டியதன் அவசியம் குறித்து உரையாடியமையை அடுத்து சூறாவளி வேகத்தில் இவ்விஜயம் இடம்பெற்றது.
தோணா முகத்துவாரத்தை செப்பனிட்டு தருவதன் மூலம் பல நூற்று கணக்கான மீனவ உறவுகளுக்கு வாழ்வாதாரம், தொழில் வாய்ப்பு கிடைக்க்க வழி செய்வதுடன் மயானத்துக்கும் தோணா முகத்துவாரத்துக்கும் இடையில் கல்வேலி அமைத்து தருவதன் மூலம் மயானத்தை பாதுகாத்து தருவதற்கும் அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தில்லையம்பலம் கோரி உள்ளார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரதிநிதியாக கள விஜயம் மேற்கொண்ட தோழர் ரவிக்குமாருக்கு கடலரிப்பு, மண்ணரிப்பு போன்றவை காரணமாக காரைதீவு இந்து மயானம் குறுகி வருகின்றது, உடலங்கள் கடலில் அடித்து செல்லப்படுகின்ற பேராபத்து நிலவுகின்றது, விரைவில் உரிய தீர்வு காணப்படாவிட்டால் உடலங்களை நல்லடக்கம் செய்கின்ற காரியத்தில் காரைதீவு பிரதேச மக்கள் மிக பாரதூரமான சவால்கள், நெருக்கடிகளை குறுகிய எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரும் என்று ஆதாரங்களுடன் காண்பிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM