தனுஷ் நடித்து இயக்கும் 'ராயன்' எனும் அவருடைய நடிப்பில் தயாராகி இருக்கும் ஐம்பதாவது திரைப்படம், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 26 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ராயன்' திரைப்படத்தில் தனுஷ், எஸ். ஜே. சூர்யா, செல்வ ராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், அனிகா சுரேந்திரன், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை புயல்' ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். கேங்ஸ்டர் பின்னணியிலான இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படம் எதிர்வரும் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படம் தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28 தினத்தை அவருடைய ரசிகர்கள் கொண்டாடும் வகையில், ஜூலை 26 ஆம் திகதியன்று இந்த திரைப்படம் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்த ராயன் திரைப்படம் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM