கார் - முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்து : இருவர் உயிரிழப்பு

11 Jun, 2024 | 07:05 PM
image

மாத்தளை, நாவுல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் அரங்கல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (10) திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

மாத்தளையிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த கார் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி மற்றும் பின்புறத்தில் அமர்ந்திருந்த இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் நாலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 64 வயதுடைய முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்புறத்தில் அமர்ந்திருந்த 76 வயதுடைய பெண்ணொருவரும்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த மற்றைய பெண் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காரின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவுல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பதிவற்ற மோட்டார் வாகனம் மற்றும் 5...

2024-06-22 09:38:12
news-image

சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில்...

2024-06-22 08:36:55
news-image

கர்நாடகாவில் முத்தையா முரளிதரன் ரூ.1400 கோடி...

2024-06-22 00:34:31
news-image

பொசன் பண்டிகை தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண...

2024-06-22 00:19:19
news-image

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன்...

2024-06-22 00:12:34
news-image

யாழில் 2024 ம் ஆண்டுக்கான சர்வதேச...

2024-06-22 00:01:03
news-image

மன்னார் முருங்கன் பகுதியில் கோர விபத்து...

2024-06-21 23:56:18
news-image

வைத்தியசாலை வீதி ஒரு வழிப்பாதையாக மாற்றம்!

2024-06-21 23:51:14
news-image

வங்குராேத்திலிருந்து நாடடை மீட்க அரசாங்கம் அனைத்து...

2024-06-21 21:45:12
news-image

ஜனாதிபதியின் மன்னார் விஜயம் குறித்து மீனவர்கள்...

2024-06-21 21:44:00
news-image

நீண்ட நாட்களுக்கு பழுதடையாத செமன் பக்கற்...

2024-06-21 21:40:13
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவர்...

2024-06-21 21:36:48