மாலைதீவுகளில் உடற்கட்டழகர் போட்டி : இலங்கைக்கு 2 தங்கம் உட்பட 3 பதக்கங்கள்

11 Jun, 2024 | 07:06 PM
image

(நெவில் அன்தனி)

மாலைதீவுகளின் தலைநகர் மாலேயில் நடைபெற்ற 14ஆவது தெற்காசிய உடற்கட்டழகர் மற்றும் உடற்தகுதி சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையைச் சேர்ந்த மூன்று உடற்கட்டழகர்கள் 2 தங்கப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதகத்தையும் வென்றனர்.

தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 200 உடற்கட்டழகர்கள் பங்குபற்றிய தெற்காசிய உடற்கட்டழகர் மற்றும் உடற்தகுதி சம்பியன்ஷிப் போட்டி  மாலேயில்  கடந்த 6ஆம் திகதி ஆரம்பமாகி நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

இந்தப் போட்டியில் பதக்கங்கள் வென்ற இலங்கை உடற்கட்டழகர்கள்  மூவரில் இருவர்   நேற்றுமுன்தினம் இரவு நாடு திரும்பினர்.

180 சென்றி மிற்றருக்கு மேற்பட்ட உயரத்தைக் கொண்ட உடற்கட்டழகர்கள்  போட்டியில் இலங்கையைச் சேர்ந்த சஹான் தில்ருக் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

182 சென்றி மிற்றருக்கு மேற்பட்ட உயரத்தைக் கொண்ட உடற்கட்டழகர்கள்  போட்டியில் இலங்கையைச் சேர்ந்த புத்திக்க ப்ரசன்ன தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

அவர்களைவிட 175 சென்றி மீற்றருக்கு மேற்பட்ட உயரத்தைக் கொண்ட உடற்கட்டழகர்கள் போடடியில் இலங்கையின் விஷ்வா தாருக்க வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

இந்த மூவரில் தங்கப் பதக்கம் வென்ற சஹன் தில்ருக் தான் தொழில் புரியும் துபாய் நொக்கிப் பயணமானார்.

மற்றைய இருவரும் இலங்கை வந்தடைந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

48ஆவது தேசிய விளையாட்டுப் போட்டி: பெண்களுக்கான...

2024-06-17 15:09:39
news-image

நேபாளத்தின் கடும் சவாலை முறியடியத்து சுப்பர்...

2024-06-17 12:17:46
news-image

நெதர்லாந்துடனான போட்டியில் அதிகூடிய மொத்த எண்ணிக்கையை...

2024-06-17 11:23:06
news-image

ஸ்கொட்லாந்தை வீழ்த்தியது அவுஸ்திரேலியா; சுப்பர் 8...

2024-06-16 14:49:20
news-image

ஆசிய எறிதல் சம்பியன்ஷிப் ஈட்டி எறிதல்...

2024-06-16 09:48:26
news-image

இரண்டு கோடி ரூபா செலவில் சிட்டி...

2024-06-16 09:50:23
news-image

முதல் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த இலங்கை...

2024-06-15 21:16:15
news-image

நேபாளத்துக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை;...

2024-06-15 16:23:37
news-image

சமரி அத்தபத்தவுக்கு மீண்டும் ஐசிசி விருது...

2024-06-15 10:36:16
news-image

அமெரிக்க - அயர்லாந்து போட்டி மழையால்...

2024-06-15 06:57:40
news-image

ஆப்கானிஸ்தன் உள்ளே ! நியூஸிலாந்து வெளியே...

2024-06-14 13:52:46
news-image

பங்களாதேஷின் சுப்பர் 8 வாய்ப்பை ஷக்கிப்...

2024-06-14 01:42:11