ஒலுவில் துறைமுகம் விரைவில் மீள இயக்கப்படும் - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்

11 Jun, 2024 | 05:35 PM
image

(எம்.மனோசித்ரா)

ஒலுவில் துறைமுக செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய தனியார் முதலீட்டின் கீழ் குறித்த துறைமுகத்திலுள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு, விரைவில் மக்கள் பாவனைக்குக் கையளிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகக் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஒலுவில் பிரதேசத்திலுள்ள புத்திஜீவிகள், அங்குள்ள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள், துறைசார் நிபுணர்கள், துறைமுக அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் உள்ளிட்ட தரப்பினருடன் ஒலுவில் துறைமுகத்தை மீள இயக்குவது குறித்துக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அந்த பிரதேசத்திலுள்ள மக்களின் நலன்களையும், அப்பிரதேசத்திலுள்ள வளங்களைப் பாதுகாக்கும் வகையிலும் ஒலுவில் துறைமுகத்தை இயக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அந்த இலக்கை எட்ட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியத்தைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் சில நிபந்தனைகள் காரணமாக அதில் சற்று சிக்கல் நிலைமை காணப்படுகிறது. எவ்வாறிருப்பினும் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முயற்சிப்போம்.

மேலும் கடற்றொழிலாளர்களை பாதுகாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள கடற்றொழில் தொடர்பான சட்ட மூலத்தை விரைவில் நிறைவேற்ற எதிர்பார்க்கப்படும் அதேவேளை, கடற்றொழில் நியதி சட்டமொன்றைத் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

மக்களின் கோரிக்கைக்கு அமையவே மன்னார் - விடத்தல் தீவு விடுக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டுக்குப் பின்னர் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருக்கின்றார். அதற்கமைய எதிர்வரும் 19ஆம் திகதி அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தலைமையில் இது தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களை தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக...

2025-01-22 05:07:19
news-image

இலங்கையில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை...

2025-01-22 05:02:53
news-image

குற்றங்கள் மற்றும் துப்பாக்கிச் சூடுகளில் ஈடுபட்டதாக...

2025-01-22 04:52:42
news-image

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,032...

2025-01-22 04:47:32
news-image

கூறும் வரை காத்திருக்காமல் உடனடியாக வெளியேறுவதே...

2025-01-22 04:44:54
news-image

உள்ளூராட்சி மன்ற அதிகாரத்துக்கு கீழ் இருக்கும்...

2025-01-22 04:39:52
news-image

தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து வைத்தியசாலைகளுக்கு அதிநவீன கதிரியக்க...

2025-01-22 03:29:17
news-image

கூட்டணியில் இணைவதற்கு மாத்திரமே ஐ.தே.க.வுக்கு அழைப்பு...

2025-01-21 17:51:59
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா திட்டத்தை பெருந்தோட்ட...

2025-01-21 15:50:37
news-image

சிலாபத்தில் ஒதுக்கப்பட்ட அளவை விட அதிகமாக...

2025-01-21 19:48:20
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுக்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம்...

2025-01-21 17:44:21
news-image

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் முன்வைத்த...

2025-01-21 15:51:17