மூன்றாவது முறையாக பதவி ஏற்றுக்கொண்ட பிறகு இந்திய பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்திற்கான கோப்பில் கைசாத்திட்டார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக தெரிவு செய்யப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்த நரேந்திர மோடி முதன்முதலாக விவசாயிகளின் நலன்களுக்காக வழங்கப்படும் நலத்திட்ட உதவி தொடர்பான கோப்பில் கைச்சாத்திட்டார்.
இதைத் தொடர்ந்து தன்னுடைய எக்ஸ் பதிவில்,
'' நாடு முழுவதும் உள்ள நமது விவசாய சகோதர சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்க எங்கள் அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அவர்களுக்கு முதல் வேலையைச் செய்யும் வாய்ப்பு கிடைத்திருப்பது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். இதன் கீழ் நாட்டில் உள்ள ஒன்பது கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பலன் பெறும் பிரதமர் கிஸான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் 17 ஆவது தவணைத் தொகை விடுவிக்கும் தொடர்பான கோப்பில் கைச்சாத்திட்டேன். இனி வரும் காலங்களில் விவசாயிகளின் நலன்களுக்காகவும், விவசாய துறையின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து பாடுபடுவோம்'' என பதிவிட்டிருக்கிறார்.
கூட்டணி அரசின் பிரதமராக பொறுப்பேற்றவுடன் வழக்கம் போல் மக்கள் நல திட்டத்தில் தன்னுடைய அக்கறையை செலுத்தி இருப்பதாக பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பது... அவருடைய வழக்கமான அரசியல் உத்தி என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM