தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் நான் சுயேட்சையாக போட்டியிடுவேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இம்முறை மக்கள் மத்தியிலும் பொது வேட்பாளர் விடயம் பேசப்படுகிறது.
எனவே, இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவார். அதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் , நான் சுயேட்சையாக போட்டியிடுவேன் என தெரிவித்தார்.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் மன்றம் நிகழ்வில் சிவில் சமூகத்திற்கு மக்கள் ஆணையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அது தவறானது. மக்கள் தங்கள் பிரதிநிதியாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்துள்ளனர். ஆனாலும் மக்கள் தமக்கானதை தாமே தெரிவு செய்வார்கள். அவ்வாறு மக்களால் உருவானதே சிவில் சமூகம். அவர்களுக்கும் தமக்கு என்ன தேவை என்பதனை தீர்மானிக்க , சொல்ல முடியும் என மேலும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM