நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்த சாசனத்தின் இறுதி வரைபு சமர்ப்பிப்பு !

11 Jun, 2024 | 04:43 PM
image

நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சாசனத்தின் இறுதி வரைபை கையளிக்கும் நிகழ்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.  

இந்த நிகழ்வில் சுகாதாரம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மயந்த திசாநாயக்க, சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உபுல் கலப்பதி, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, முன்னாள் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய, இங்கை மருத்துவ சபையின் முன்னாள் தலைவரும், சர்வோதய அமைப்பின் தலைவருமான வைத்தியகலாநிதி வின்யா ஆரியரத்ன, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இந்நாட்டுக்கான பிரதிநிதி வைத்திய கலாநிதி அலகா சிம் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த இறுதி வரைபு சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உபகுழு மற்றும் அதன் நிபுணர்கள் குழுவினால் உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய இந்த சாசனம் தெற்காசிய வலயத்தில் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது சாசனமாக அமைகின்றது.

இதற்கு அமைய நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சாசனத்தின் இறுதி வரைபை சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுவின் தலைவர்  உபுல் கலப்பதியினால், சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் கௌரவ மயந்த திசாநாயக்கவிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், ஏனைய துறைசார் நிபுணர்கள், சுகாதார ஒழுங்குபடுத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், நோயாளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41