ஒன்லைன் கசினோவை ஒழுங்குபடுத்த துரித நடவடிக்கை எடுக்கவும் - நிதி அமைச்சருக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கடிதம் !

11 Jun, 2024 | 03:09 PM
image

ஒன்லைன் கசினோ செயற்படுத்துவதற்கு சட்டரீதியான ஏற்பாடு ஒன்று இல்லாத நிலையில் அதனைப் பொருட்படுத்தாமல் நாட்டுக்குக் கிடைக்கவேண்டிய வருமானத்தை இல்லாமல் செய்யும் வகையில் ஒன்லைன் கசினோ செயற்படுத்தப்படுவது தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவில் புலப்பட்டது.

இது தொடர்பில் விரைவாக கவனம் செலுத்துமாறு கோரி நிதி அமைச்சருக்கு கடிதம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். 

ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் (06) இடம்பெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

கசினோ உள்ளிட்ட சூதாட்ட வர்த்தகங்களில் இருந்து அறவிடப்படவேண்டிய நிலுவை வரிகளை அறவிடுதல் மற்றும் இது போன்ற வர்த்தகங்களுக்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பில் மிகவும் முக்கியமான ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையொன்றை ஸ்தாபிப்பதற்குத் தேவையான சட்டங்களை நிறைவேற்றுவதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும், அதனை மேலும் தாமதப்படுத்த வேண்டாம் எனவும் அதிகாரிகளுக்குக் குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், 2010 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின்  வது பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 4 வது பிரிவின் கீழ் ஒழுங்குவிதி மற்றும் கட்டளை கருத்திற்கொள்ளப்பட்டதுடன், அதனையடுத்து அதற்கான அனுமதி குழுவினால் வழங்கப்பட்டது.

அத்துடன், 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் 27 ஆம் பிரிவின் கீழான ஒழுங்குவிதியும் அரசாங்க நிதி பற்றிய குழுவினால் கருத்திற்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் லன்சா, மயந்த திசாநாயக்க, சந்திம வீரக்கொடி, நாளக கொடஹேவா, கௌரவ ஹர்ஷண ராஜகருணா மற்றும் கௌரவ மதுர விதானகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பசறையில் வீதியை விட்டு விலகி மோட்டார்...

2024-06-17 19:33:26
news-image

யாழில் கடலட்டை உற்பத்தி அபரீதமான வளர்ச்சியை...

2024-06-17 19:00:39
news-image

வாடகை வீட்டிற்கும் வரி : சர்வதேச...

2024-06-17 17:31:38
news-image

பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதி போதைப்பொருளுடன்...

2024-06-17 17:59:41
news-image

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த...

2024-06-17 17:59:10
news-image

மலையக மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த...

2024-06-17 17:28:31
news-image

யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தை...

2024-06-17 17:23:48
news-image

பதியத்தலாவயில் வேன் மோதி ஒருவர் உயிரிழப்பு...

2024-06-17 17:23:24
news-image

நீர் குழாயில் வெடிப்பு : நள்ளிரவுக்குள்...

2024-06-17 16:36:53
news-image

75 ஆயிரம் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் கொழும்பில்...

2024-06-17 16:44:36
news-image

அநுராதபுரம் மற்றும் மிஹிந்தலை புதிய ரயில்...

2024-06-17 17:19:50
news-image

மாத்தளையில் நாளை நீர் வெட்டு

2024-06-17 15:49:35