நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தில் ஜூன் மாதத்தின் முதல் 11 நாட்களில் மாத்திரம் 971 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 25,891 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 9 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களின் எண்ணிக்கை 5,624 ஆகும்.
மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 3,930 டெங்கு நோயாளர்களும் கம்பஹா மாவட்டத்திலிருந்து 2,487 டெங்கு நோயாளர்களும் கண்டி மாவட்டத்திலிருந்து 1,986 டெங்கு நோயாளர்களும் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 1,441 டெங்கு நோயாளர்களும் களுத்துறை மாவட்டத்திலிருந்து 1,372 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM