வவுனியாவில் நேற்று (31) பிற்பகல் மத்திய பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் இராணுவ வீரர் ஒருவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.


நேற்று பிற்பகல் பஸ் நிலையத்தில் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் 100 கிராம் 700 மில்லி கிராம் கஞ்சாவினை தன்வசம் வைத்திருந்த  போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இரணுவ வீரர் ஏற்கனவே கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்து பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த இராணுவ வீரர் விசாரணைகளின் பின்னர் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.