(நெவில் அன்தனி)
தென் ஆபிரிக்காவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் நியூயோர்க் நசவ் கன்ட்றி சர்வதேச விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்த டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் தென் ஆபிரிக்கா 4 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இந்த வெற்றியுடன் 9ஆவது ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் சுப்பர் 8 சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பை தென் ஆபிரிக்கா அதிகரித்துக்கொண்டுள்ளது.
அடுத்தடுத்த இரண்டு தினங்கள் மிகவும் குறைந்த மொத்த எண்ணிக்கைகளை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய அணிகள் தோல்வியைத் தழுவியமை குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.
இந்தியாவுக்கு எதிராக இதே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 120 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 6 ஓட்டங்களால் தோல்வி அடைந்திருந்தது.
பங்களாதேஷுடனான வெற்றியை அடுத்து ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் மிகவும் குறைந்த மொத்த எண்ணிக்கையை தக்கவைத்த அணி என்ற பெருமையை தென் ஆபிரிக்கா தனதாக்கிக்கொண்டது. இதற்கு முன்னர் இந்தியாவின் 119 ஓட்டங்களே தக்கவைக்கப்பட்ட மிகக் குறைந்த எண்ணிக்கையாக இருந்தது.
துடுப்பாட்ட வீரர்களுக்கு மீண்டும் சிரமத்தைக் கொடுத்த இந்த ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த தென் ஆபிரிக்கா 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் போன்றே பங்களாதேஷுடனான போட்டியிலும் தென் ஆபிரிக்காவின் முன்வரிசை விரர்கள் நால்வரும் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழக்க 5ஆவது ஓவரில் அதன் மொத்த எண்ணிக்கை 23 ஓட்டங்களாக இருந்தது.
இந்த 23 ஓட்டங்களில் குவின்டன் டி கொக்கின் பங்களிப்பு 18 ஓட்டங்களாகும்.
முந்தைய போட்டியில் போன்றே இந்தப் போட்டியிலும் தென் ஆபிரிக்காவை ஹென்ரிச் க்ளாசனும் டேவிட் மில்லரும் மீட்டெடுக்க முயற்சித்தனர்.
அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் ஹென்றிச் க்ளாசன் 46 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து டேவிட் மில்லர் 29 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (106 - 6 விக்.)
அதன் பின்னர் கடைசி 10 பந்துகளில் 7 ஓட்டங்களே பெறப்பட்டன.
அதிரடிக்கு பெயர் பெற்ற தென் ஆபிரிக்க வீரர்களினால் 5 பவுண்டறிகளையும் 6 சிக்ஸ்களையுமே பெறமுடிந்தது.
பந்துவீச்சில் தன்ஸிம் ஹசன் சக்கிப் 4 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தஸ்கின் அஹ்மத் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
எதிரணியைப் போன்றே பங்களாதேஷின் முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் நால்வர் பிரகாசிக்கத் தவறினர்.
முன்வரிசையில் அணித் தலைவர் நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ மாத்திரமே (14) இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார். (50 - 4 விக்.)
அதனைத் தொடர்ந்து தௌஹித் ரிதோய், மஹ்முதுல்லா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் ஓரளவு பலப்படுத்தினர்.
மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய தௌஹித் ரிதோய் 2 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 37 ஓட்டங்களைப் பெற்றார்.
கடைசி 2 ஓவர்களில் பங்களாதேஷின் வெற்றிக்கு 18 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
19ஆவது ஓவரை வீசிய ஒட்நீல் பாட்மன் மிகத் திறமையாக பந்துவீசி 7 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்தார்.
கடைசி ஓவரை கேஷவ் மஹாராஜ் மிகவும் நுட்பத்திறனுடன் வீசி 2 விக்கெட்ளை வீழ்த்தியதுடன் 6 ஓட்டங்களை மட்டும் கொடுத்து தென் ஆபிரிக்காவின் வெற்றியை உறுதி செய்தார்.
கடைசி ஓவரின் 5ஆவது பந்தில் ஆட்டம் இழந்த மஹ்முதுல்லா 20 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் கேஷவ் மஹாராஜ் 4 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அன்றிச் நோக்கியா 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கெகிசோ ரபாடா 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ஹென்றிச் க்ளாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM