(நெவில் அன்தனி)
தென் ஆபிரிக்காவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நியூயோர்க், நசவ் கன்ட்றி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று திங்கட்கிழமை 10 நடைபெறுகிறது.
இந்த மைதானத்தில் தனது முதல் இரண்டு போட்டிகளை விளையாடி வெற்றிபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு இப் போட்டியில் சாதகமான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் சுப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொள்ளும் பொருட்டு பங்களாதேஷ் இன்றைய போட்டியில் திறமையை வெளிப்படுத்தி தென் ஆபிரிக்காவுக்கு சவால் விடுத்து வெற்றி பெற முயற்சிக்கும்.
இந்தப் போட்டியில் தென் ஆபிரிக்கா வெற்றிபெற்றால் முதலாவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெறும்.
இந்த இரண்டு அணிகளுக்கும் இதுவரை நடைபெற்ற 8 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆபிரிக்கா எட்டிலும் வெற்றிபெற்றுள்ளதுடன் அதனை இன்று 9ஆக உயர்த்திக்கொள்ள தென் ஆபிரிக்கா முயற்சிக்கும்.
ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்தாடிய 3 சந்தர்ப்பங்களிலும் தென் ஆபிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.
இந்த பெறுபேறுகளின் அடிப்படையில் தென் ஆபிரிக்கா மீண்டும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணிகள்
தென் ஆபிரிக்கா: குவின்டன் டி கொக், ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ஏய்டன் மார்க்ராம் (தலைவர்), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்றிச் க்ளாசன், டேவிட் மில்லர், மாக்கோ ஜென்சன், கேஷவ் மஹாராஜ், கெ கிசோ ரபாடா, ஒட்நீல் பாட்மன், அன்றிச் நொக்கியா.
பங்களாதேஷ்: தன்ஸித் ஹசன், சௌம்யா சர்க்கார், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசெய்ன் ஷன்டோ (அணித் தலைவர்), தௌஹித் ரிதோய், ஷக்கிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, ரிஷாத் ஹொசெய்ன், தன்ஸிம் ஹசன், தஸ்கின் அஹ்மத், முஸ்தாபிஸுர் ரஹ்மான்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM