சர்வ அருளை வழங்கும் சரள யோகம்

Published By: Digital Desk 7

10 Jun, 2024 | 09:27 PM
image

நாம் பிறக்கும் போதே பல்வேறு யோகங்களை பெறுவதற்கான பாக்கியத்துடன் தான் பிறக்கிறோம். ஆனால் அதை எப்போது பெறுகிறோம்? எப்படி பெறுகிறோம்? என்பது குறித்து நாம் அறிந்து கொள்வதில்லை. இன்னும் சிலர் அவர்களுடைய ஜாதகத்தில் யோகங்கள் நிறைய இருக்கும். ஆனால் அதைப்பற்றி தெரிந்து வைத்திருப்பதில்லை. அதில் ஒன்றுதான் சரள யோகம். ஒருவர் நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்றால் அவர்களுக்கு சரள யோகம் பரிபூரணமாக கிடைத்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். மேலும் இது பற்றி எம்முடைய ஆன்மீக  முன்னோர்கள் பல குறிப்புகளையும் வழங்கியிருக்கிறார்கள்.

சரள யோகம் என்பது ஒருவருடைய ஜாதகத்தில் அவர் பிறந்திருக்கும் லக்னத்திலிருந்து எட்டாவது வீட்டின் அதிபதி-  எட்டாமிடத்தில் இருந்தால் அவர்களுக்கு சரள யோகம் இருக்கிறது என பொருள். உதாரணமாக நீங்கள் மிதுன லக்னமாக இருக்கிறீர்கள் என்றால் மிதுன லக்னத்திலிருந்து எட்டாம் வீடான மகர வீட்டின் அதிபதியான சனி பகவான்-  எட்டாம் வீடான மகரத்தில் இருந்தால் உங்களுக்கு சரள யோகம் இருக்கிறது என புரிந்து கொள்ளலாம்.

இவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் இளமையாகவும் தோற்றமளிப்பர். இந்த ஜாதகருக்கு எழுபது வயதானாலும் அவர் தோற்றத்தில் நாற்பத்தைந்து வயதினரை போல் காட்சி அளிப்பர். உடல் ஆரோக்கியமாக இருப்பதால் மனதளவில் உற்சாகத்துடன் இயங்குவர். அத்துடன் மற்றவர்களுக்கு மனவெழுச்சி தரக்கூடிய பேச்சுக்களை பேசுவதிலும் வல்லவர்களாக இருப்பர். உதாரணத்திற்கு சுய முன்னேற்ற உரை நிகழ்த்துபவர்களில் பெரும்பாலானவர்கள் சரள யோகம் பெற்றவர்களாக இருப்பர்.

மேலும், இவர்கள் தொடர்ந்து இளமையுடனும், மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ்க்கையை வாழ வேண்டும் என விரும்பினால் சனிக்கிழமை தோறும் தொடர்ச்சியாக சனி பகவானை வழிபட வேண்டும்.  மேலும் சனி பகவானுக்குரிய  பல விடயங்களை ஜோதிட நிபுணர்களிடமும் ஆன்மீக முன்னோர்களிடமும் கேட்டு அறிந்து பின்பற்றினால் ஆயுள் முழுவதும் ஆண்டவன் அருளைப் பெற்று சர்வ வல்லமையுடன் வலம் வரலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சித்தர்களின் ஆசியையும் அருளையும் பெறுவதற்கு எளிய...

2024-07-11 17:36:37
news-image

சந்திராஷ்டமத்தைக் கண்டு பயம் கொள்ளலாமா...?!

2024-07-10 17:50:31
news-image

அன்ன தோஷத்தை அகற்றும் நந்தி பகவான்...

2024-07-09 17:55:38
news-image

கண்களின் கர்மாவை அகற்றும் எளிய பரிகாரம்..!?

2024-07-06 18:20:54
news-image

கும்பத்தின் மீது தேங்காய் வைப்பதன் பின்னணி...

2024-07-05 17:09:04
news-image

பண வரவை அதிகரிப்பதற்கான எளிய வழிமுறைகள்...!?

2024-07-04 16:37:48
news-image

செல்வ வளத்தை அள்ளி வழங்கும் கோதூளி...

2024-07-03 16:50:28
news-image

அயலகத்தில் வாழ்பவர்கள் குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கான...

2024-07-02 23:38:29
news-image

உங்களின் செல்வ நிலையை உயர்த்தும் ஆருடா...

2024-07-01 19:31:15
news-image

பண வரவை அதிகரித்துக் கொள்வதற்கான எளிய...

2024-06-29 16:35:07
news-image

முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் மாத்ரு தோஷம்..!

2024-06-28 17:55:45
news-image

திருமண தடையை அகற்றும் நெல்லிக்காய் ..!

2024-06-28 13:54:03