மூளை கட்டியின் வகைகளும், காரணங்களும்...!?

Published By: Digital Desk 7

10 Jun, 2024 | 05:28 PM
image

எம்மில் சிலருக்கு தலைவலி ஏற்படக்கூடும். அதிலும் குறிப்பாக அதிகாலை அல்லது காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே கடுமையான தலைவலி ஏற்படக்கூடும்.

இத்தகைய அறிகுறிகள் தொடர்ந்தால் உங்களுடைய மூளையில் கட்டி ஏற்பட்டிருக்கிறது என்பதனை உணர்ந்து, உடனடியாக பிரத்யேக வைத்திய நிபுணரை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும் என வைத்திய நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

மூளைக்கட்டி என்பது மூளையில் அல்லது மூளைப் பகுதியின் அருகில் உள்ள திசுக்களில் ஏற்படும் அசாதாரணமான செல்களின் வளர்ச்சியாகும். மூளை திசுக்களில் மூளை கட்டிகள் ஏற்படலாம். மூளை திசுக்களுக்கு அருகிலும் மூளை கட்டிகள் ஏற்படலாம். மேலும் மூளை பகுதியில் அமைந்துள்ள நரம்புகள், பிட்யூற்றரி சுரப்பி, ஃபீனியல் சுரப்பி, மூளையின் மேற்பரப்பு பகுதி ஆகியவற்றிலும் மூளை கட்டிகள் ஏற்படக்கூடும்.

சிலருக்கு மூளை கட்டிகள் மூளையிலேயே ஏற்படக்கூடும். இதனை முதன்மையான மூளை கட்டிகள் என வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள். வேறு சிலருக்கு உடலின் வேறு பகுதியில் புற்றுநோய் கட்டி பாதிப்பு ஏற்பட்டு, அவை மூளைக்கு பரவி இருக்கலாம். இதனை இரண்டாம் நிலை மூளைக் கட்டிகள் என்று வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

முதன்மையான மூளை கட்டிகளில் தீங்கற்ற மூளை கட்டிகள் என்றும், புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் மூளை கட்டிகள் என்றும் வகைப்படுத்துகிறார்கள்.‌ மூளையில் ஏற்படும் கட்டியின் அளவு குறைவாக இருந்தாலும் அதனால் ஏற்படும் பக்க விளைவு அதிகம். அதாவது அறிகுறிகளை விரைவாகவும், தொடர்ச்சியாகவும் ஏற்படுத்தக்கூடும். வேறு சிலருக்கு இவை மெதுவாக வளர்ச்சி அடைந்து அதன் அறிகுறிகளை தாமதமாக வெளிப்படுத்தக்கூடும்.

மூளையில் ஏற்படும் கட்டிகளின் அளவு வெவ்வேறு வகையினதாக இருந்தாலும் அதனை தொடக்க நிலையில் கண்டறிந்தால், அவை தீங்கற்ற கட்டியாக இருந்தால் சத்திர சிகிச்சைகள் மூலம் அதனை அகற்றி, முழுமையான நிவாரணத்தை பெற இயலும்.‌

காலையில் உறக்கம் களைந்து படுக்கையில் இருந்து எழும்போது கடும் தலைவலி, அடிக்கடி ஏற்படும் தலைவலி, ஒற்றை தலைவலி, குமட்டல், வாந்தி, மங்கலான பார்வை, இரட்டையாக தோன்றுவது, கை அல்லது கால் பகுதியில் உணர்விழப்பு, சமநிலையில் குறைபாடு, பேச்சுத் திறனில் குழப்பம், அதீத சோர்வு, நினைவுத்திறனில் பாரிய குறைபாடு, வலிப்பு தாக்கம், கேட்கும் திறனின் இடையூறு, அதீத பசி, எடை அதிகரிப்பு போன்ற பல்வேறு அறிகுறிகள் ஏற்பட்டால் மூளையில் கட்டி ஏற்பட்டிருக்க கூடும் என்பதை அவதானித்து, உடனடியாக வைத்திய நிபுணர்களை சந்தித்து, அவர்கள் பரிந்துரைக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

மூளை பகுதியில் இயங்கும் நரம்பியல் செயல்பாட்டிற்கான பிரத்யேக பரிசோதனை, சிடி ஸ்கேன், எக்ஸ்ரே, எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை, மூளை திசு பரிசோதனை ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்ள வைத்தியர்கள் பரிந்துரைப்பர். இந்த பரிசோதனைகளின் முடிவுகளை பொறுத்து உங்களுடைய மூளைக்கட்டியின் பாதிப்பையும், அதன் வகையையும், வீரியத்தையும் துல்லியமாக அவதானித்து, அதற்குரிய சிகிச்சையை தீர்மானிப்பர். அதன் பிறகு மருந்தியல் சிகிச்சை+ சத்திர சிகிச்சை + கதிர்வீச்சு சிகிச்சை + மின்னதிர்வு சத்திர சிகிச்சை + கீமோதெரபி+ டார்கெடட் தெரபி போன்ற சிகிச்சைகளை வழங்கி முழுமையான நிவாரணத்தை தருவர். மேலும் இதன்போது நோயாளியின் வயது, உடல் திறன், ஆரோக்கியம் ஆகியவற்றை அவதானித்து அவர்களுக்கு பிஸிகல் தெரபி, ஒக்குபேஷனல் தெரபி, ஸ்பீச் தெரபி ஆகிய சிகிச்சைகளை இணைந்து வழங்கி முழுமையான நிவாரணத்தை அளிப்பர்.

வைத்தியர் செந்தில் பாபு

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15
news-image

ஹைபர்லிபிடெமியா எனும் அதீத கொழுப்புகளை அகற்றுவதற்கான...

2025-01-05 17:50:36
news-image

ரியாக்டிவ் ஒர்தரைடீஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-01-03 16:39:17
news-image

உணவுக் குழாய் பாதிப்பு - நவீன...

2025-01-02 16:38:45
news-image

கை விரல் நுனியில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-01-01 21:40:07
news-image

யூர்டிகேரியா எனும் தோல் அரிப்பு பாதிப்பிற்கு...

2024-12-31 17:09:55
news-image

ஆட்டிசம் குழந்தைகளுக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-12-30 16:33:25
news-image

தாடை வலி பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2024-12-27 16:53:23