நடிகர் பிரேம்ஜி அமரன்- இந்து திருமணம்

Published By: Digital Desk 7

10 Jun, 2024 | 05:13 PM
image

இசையமைப்பாளர் -பாடகர்- நடிகர் -பாடலாசிரியர் என பன்முக ஆளுமை கொண்ட நடிகர் பிரேம்ஜி அமரனுக்கும், இந்து என்ற பெண்ணுக்கும் திருத்தணியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணம் நடைபெற்றது.‌

தமிழில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும், கதையின் நாயகனாகவும் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் பிரேம்ஜி அமரன்.

குறிப்பாக 'சென்னை 28' படத்தில் இவரது நடிப்பை பாராட்டாதவர்கள் யாரும் இல்லை என சொல்லலாம். நாற்பது வயதை கடந்த பிறகும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த பிரேம்ஜி அமரனுக்கு பெற்றோர்கள் தீவிரமாக வரன் தேடினர்.‌

இறுதியில் நாற்பத்தைந்து வயது நிறைவடையும் தருவாயில் அவருக்கும் இந்து என்ற பெண்ணிற்கும் திருமணம் நிச்சயமானது. இதைத்தொடர்ந்து இவர்களின் திருமணம் ஜூன் மாதம் ஒன்பதாம் திகதியன்று முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் ஆலயத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ எளிமையாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் அவருடன் நடித்த நடிகர்களும், அவரது சகோதரரும், இயக்குநருமான வெங்கட் பிரபுவின் நட்பு வட்டாரத்தினரும் பங்கு பற்றி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்