கொரோனா கொடுமையை விவரிக்கும் லாக் டவுன்

Published By: Digital Desk 7

10 Jun, 2024 | 04:54 PM
image

கொரோனா வைரஸ் தொற்று பரவியிருந்த காலகட்டத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளும் வகையில் விதிக்கப்பட்ட லாக் டவுன் எனும் விடயத்தால் உறவுகளுக்கு இடையே ஏற்பட்ட உணர்வு பூர்வமான விரிசல்களையும் பூசல்களையும் விவரிக்கும் வகையில் :'லாக் டவுன்' எனும் திரைப்படம் தயாராகி இருக்கிறது. இம்மாதம் வெளியாகவிருக்கும்' லாக் டவுன்' திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஏ ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லாக் டவுன்' எனும் திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன்‌, இந்துமதி ராஜ்குமார் லொள்ளு சபா மாறன் விது, அபிராமி, ரேவதி, பிரியா கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் மற்றும் சித்தார்த் விபின் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். சஸ்பென்ஸ் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. டீசரில் கதையின் நாயகியான அனுபமா பரமேஸ்வரன் அனிதா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதும், கொரோனா காலகட்டத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளல் தொடர்பான விடயம் இடம் பிடித்திருப்பதாலும், பார்வையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனிடையே நடிகை அனுபமா பரமேஸ்வரன் 'பிரேமம்' எனும் மலையாள படத்தில் நடித்ததன் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடத்தில் அறிமுகமாகி இருந்தாலும், தனுஷின் 'கொடி', ஜெயம் ரவியின் 'சைரன்' ஆகிய படத்தின் மூலம் பிரபலமானவர் என்பதும், இவர் கதையின் நாயகியாக முதன் முதலாக 'லாக் டவுன்' படத்தில் நடித்திருக்கிறார் என்பதும் இவர் தற்போது துருவ் விக்ரம் நடிக்கும் 'பைசன்' படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்