விதார்த் நடிக்கும் 'லாந்தர்' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 7

10 Jun, 2024 | 04:49 PM
image

தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு நிலையான சந்தை மதிப்பை உருவாக்கி தயாரிப்பாளர்களையும், விநியோகஸ்தர்களையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான யதார்த்த நாயகன் விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'லாந்தர்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது

இயக்குநர் சஜீ சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லாந்தர்' திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீண் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை எம் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீ விஷ்ணு தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர், பாடல்கள், டீசர் ஆகிய வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் இம்மாதம் 21 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனிடையே 'அஞ்சாமை' படத்தின் வெற்றியை தொடர்ந்து விதார்த் நடிப்பில் தயாராகி இருக்கும் 'லாந்தர்' திரைப்படமும் இம்மாதம் வெளியாவதால் அவருடைய ரசிகர்கள் இரட்டை மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடகர் அறிவு எழுதி, பாடி, இசையமைத்திருக்கும்...

2024-07-19 17:36:22
news-image

மாரி செல்வராஜின் பறவை- முத்தம்- 'வாழை'

2024-07-19 17:37:34
news-image

ஹிப் ஹொப் தமிழா ஆதி நடிக்கும்...

2024-07-19 17:37:47
news-image

தீபாவளிக்கு வெளியாகும் சிவ கார்த்திகேயனின் 'அமரன்'

2024-07-19 17:38:29
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' படத்தில்...

2024-07-19 16:08:59
news-image

மெய்யழகன்' கார்த்தியின் சந்தை மதிப்பை உயர்த்துமா..!?

2024-07-19 16:16:10
news-image

கிறாபிக்ஸ் காட்சிகளுடன் அசத்தும் 'சதுர்'

2024-07-19 16:17:08
news-image

படப்பிடிப்புடன் தொடங்கிய நடிகர் காளி வெங்கட்டின்...

2024-07-19 16:17:47
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி- சூரி...

2024-07-17 17:00:23
news-image

தனுஷ் இறங்கி செய்திருக்கும் தரமான சம்பவம்...

2024-07-17 16:53:47
news-image

தூய்மை பணியாளர்களின் உணர்வெழுச்சியை பேசும் ''நாற்கர...

2024-07-17 16:26:31
news-image

தான்யா ரவிச்சந்திரன் நடிக்கும் 'றெக்கை முளைத்தேன்'...

2024-07-17 16:17:14