தயாரிப்பாளர் மதியழகன் கதையின் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படத்திற்கு 'பிதா' (பிரபாகரன் என்கிற தாமோதரன்) என பெயரிடப்பட்டு, அதற்கான அறிமுக விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதன்போது தமிழ் திரைப்படத் துறையிலிருந்து மட்டுமல்லாமல் அரசியல் துறையிலிருந்தும் ஏராளமான பிரபலங்கள் அதிதிகளாக பங்கு பற்றி சிறப்பித்தனர்.
படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான மதியழகன் பேசுகையில், '' இந்த திரைப்படத்தில் ஈழம் பற்றியும், மேதகு பிரபாகரனை பற்றியும் விடயங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இவை வணிக நோக்கத்திற்காகவோ அல்லது பரபரப்பிற்காகவோ பயன்படுத்தவில்லை. மேலும் அவர்களை எந்த விதத்திலும் அவமதிக்கவில்லை. மிகவும் உண்மையாகவும், உன்னதமாகவும் இந்த படைப்பை உருவாக்கி இருக்கிறோம். இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான படைப்பாக இந்த திரைப்படம் இருக்கும் ''என்றார்.
இப்படத்திற்காக வெளியிடப்பட்ட அறிமுக காணொளியில் கதையின் நாயகனான மதியழகன் குருதியை அதுவும் மனித குருதியில் ஓவியம் வரைவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தத் திரைப்படத்தை சாமானியன் பட கதாசிரியர் கார்த்திக் குமார் இயக்குகிறார். அறிமுக நாயகன் மதி அழகனுடன் சரவணா சுப்பையா வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிராங்கிளின் ரிச்சர்ட் வழிப்பறிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ரஷாந்த் அர்வின் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீ நிக் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் டி பாலசுப்பிரமணி மற்றும் சி.சதீஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
பிதா அன்மாஸ்கிங் எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இப்படத்திற்கான பிரத்தியேக காணொளியில் பிரபாகரன் என்கிற தாமோதரன் எனும் வசனமும், மனிதர்களின் குருதியிலிருந்து ஓவியம் வரையும் கலைஞனையும் காண முடிவதால் ரசிகர்களிடையே பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM