தமிழகத்தில் உள்ள விக்கிரவாண்டி எனும் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய திமுகவைச் சேர்ந்த என். புகழேந்தி உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. காலியான அந்தத் தொகுதிக்கு எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதியன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மட்டுமல்லாமல் பீகார்(1), மேற்கு வங்காளம் (4), மத்திய பிரதேசம் (1) ,உத்தரகாண்ட்( 2), பஞ்சாப் (1), இமாச்சல் பிரதேசம்(3) ஆகிய மாநிலங்களில் காலியாக இருக்கும் மொத்தம் பதிமூன்று சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஜூலை 10 ஆம் திகதியன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், பதிவான வாக்குகள் ஜூலை 13-ஆம் திகதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஜூன் 14-ஆம் திகதியன்று தொடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே விக்கிரவாண்டி தொகுதிக்கான சட்டப்பேரவை இடைத் தேர்தலில் திமுகவிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும் என அக்கட்சியின் மாநில தலைவரான செல்வ பெருந்தகை அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM