பண மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தொடர்பில் தகவல் கோரும் பொலிஸார்

10 Jun, 2024 | 04:13 PM
image

பண மோசடியுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரொருவரை கைது செய்வதற்காக மிரிஹான பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் இங்கிலாந்து மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி ஒரு கோடியே 75 இலட்சம் ரூபா பண மோசடி செய்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த பண மோசடியுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் தலைமையின் கீழ் இந்த பண மோசடி இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, பிரதான சந்தேக நபரான தனியார் நிறுவனத்தின் உரிமையாளரின் புகைப்படமொன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.  

இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 0718591643 அல்லது 0718137373 என்ற மிரிஹான பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சுமார் 2000க்கும் மேற்பட்டவர்களை பலிகொள்ளக்கூடிய...

2024-07-22 22:32:21
news-image

22 ஆவது திருத்தத்தை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம்...

2024-07-22 17:16:25
news-image

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வட்டியில்லா...

2024-07-22 22:02:03
news-image

இந்து சமுத்திரத்தின் சுதந்திரம் மற்றும் பிராந்திய...

2024-07-22 21:54:12
news-image

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புனிதஸ்தலத்தில் சமய...

2024-07-22 21:31:10
news-image

22 ஆவது திருத்தம் ஜனாதிபதி தேர்தல்...

2024-07-22 17:15:15
news-image

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் 455 697...

2024-07-22 19:25:35
news-image

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி மக்களின் வரிப்பணத்தை...

2024-07-22 17:18:35
news-image

சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதில் இணையுமாறு வெளிநாட்டு...

2024-07-22 19:10:14
news-image

"தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு" : புரிந்துணர்வு...

2024-07-22 18:38:46
news-image

சுங்கத் திணைக்கள நிர்வாக அதிகாரி மீது...

2024-07-22 17:23:24
news-image

குருணாகலில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு...

2024-07-22 20:29:26