சிட்னியில் உள்ள அமெரிக்க தூதரகம் சுத்தியலால் சேதப்படுத்தப்பட்டமைக்கு அவுஸ்திரேலிய பிரதமர் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் சீற்றத்தை குறைத்துக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அன்டனி அல்பெனிஸ் இவ்வாறான நடவடிக்கைகள் அவுஸ்திரேலிய வழிமுறையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு என்பது மிகவும் சிக்கலான விவகாரம் என தெரிவித்துள்ள அவர் இது சிக்கலான விடயம் இதற்கு சில நுணுக்கங்கள் அவசியம் இது வெறுமனே கோசமிடும் விடயமல்ல என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தூதரகத்திற்கு வர்ணம் தீட்டுவது போன்ற நடவடிக்கைகள் சொத்துக்களை சேதப்படுத்தும் குற்றம் என்பதற்கு அப்பால் செய்தவர்களி;ன் நோக்கத்தை நிறைவேற்ற உதவப்போவதில்லை எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
முகத்தை மறைத்த உருவமொன்று துணைதூதரகத்தின் ஜன்னல்களை சேதப்படுத்துவதை பாதுகாப்பு கமராக்கள் காண்பித்துள்ளன என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தூதரகத்தின் மீது இரண்டு சிவப்பு தலைகீழ் முக்கோணங்களை வரைந்து சென்றுள்ளனர் இவை பாலஸ்தீனியர்களின் எதிர்ப்பை வெளியிடுவதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் வரைபவை என காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM