(நெவில் அன்தனி)
அன்டிகுவா நோர்த் சவுண்ட் சேர் விவியன் றிச்சர்ட்ஸ் விளையாட்டரங்கில் நேற்று (9) இரவு நடைபெற்ற பி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஓமான் அணியை 7 விக்கெட்களால் ஸ்கொட்லாந்து அணி மிக இலகுவாக வெற்றிகொண்டது.
ப்றெண்டன் மெக்முலனின் அதிரடி அரைச் சதம், ஜோர்ஜ் முன்சேயின் திறமையான துடுப்பாட்டம் என்பன ஸ்கொட்லாந்தின் வெற்றியை இலகுவாக்கின.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஓமான் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 150 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் ப்ராதிக் ஆதவேல் 54 ஓட்டங்களையும் அயான் கான் 41 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துதுவீச்சில் சபியான் ஷெரிப் 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் 13.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்று மிக இலகுவாக வெற்றிபெற்றது.
ஆரம்ப வீரர் ஜோர்ஜ் முன்சே, 3ஆம் இலக்க வீரர் ப்றெண்டன் மெக்முலன் ஆகிய இருவரும் திறைமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு பலம் சேர்த்துக்கொடுத்தனர்.
முன்சே 41 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மெக்முலன் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் மெத்யூ க்ரொஸுடன் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.
மெக்முலன் 31 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 61 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
க்ரொஸ் ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றார்.
ஆட்டநாயகன்: ப்றெண்டன் மெக்முலன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM