(புதுடில்லியிலிருந்து லியோ நிரோஷ தர்ஷன்)
உலகின் மிகப் பெரிய ஜனநாயக தேர்தலான இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடிய நிலையில், தொடர்ந்தும் 3ஆவது முறையாக பாரதப் பிரதமராக நரேந்திர மோடி இன்று ஞாயிற்றுக்கிழமை (9) மாலை 7:21சுப நேரத்தில் பதவியேற்றுக் கொண்டார். இதற்கான உத்தியோகபூர்வ பிரம்மாண்ட நிகழ்வு பன்னாட்டு தலைவர்கள் உள்ளிட்ட 9000 இராதந்திரிகளின் பங்கேற்புடன் புதுடில்லியிலுள்ள ராஷ்டிரபதி பவனில் இடம்பெற்றது.
கடும் பாதுகாப்புகளுக்கு மத்தியில் கோலாகல ஏற்பாடுகளுடன் தலைநகர் டில்லி விழாக் கோலம் பூண்டிருந்தது. 44 நாட்களாக 7 கட்டங்களாக இடம்பெற்ற உலகின் மிகப் பெரிய ஜனநாயக தேர்தலாகக் கருதப்படும் இந்திய பொதுத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி வெற்றியை தமதாக்கிக் கொண்டது.
மோடியின் கட்சி உட்பட தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து வெற்றி பெற்ற மூன்றாவது பொதுத் தேர்தலாக இது பதிவுகளில் இணைந்துள்ளது. வெற்றி உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் பிரதமர் மோடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராகவும் உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அமைச்சரவை அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜகத் பிரகாஷ் நட்டா, சிவராஜ் சிங் சொவான், நிர்மலா சீதாராமன், எஸ். ஜெய்சங்கர், மனோகர் லால் , எச். டி. குமாரசுவாமி, பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான், ஜீத்தன் ராம் மஜ்ஜி, ரஜிவ் ரஞ்சன் சிங், சர்பானந்தா சோனோவால், வீரேந்திர குமார், கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு , பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி, ஜுவல் ஓரம், கிரிராஜ் சிங், வைஷ்ணவி வைஷ்ணவ், ஆகியோரும் இன்றைய தினம் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM