தெமட்டகொடை பகுதியில் இளைஞன் ஒருவனை கடத்திய குற்றச்சாட்டில் கொழும்பு குற்றப்பிரிவினாரால் நேற்று கைதுசெய்யப்பட்டு பிணையில்  விடுதலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை எதிர்வரும் 12 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது.

இவர் நேற்று கைது செய்யப்பட்டு பின்னர் ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.