பலாலி வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும் Clean Ocean Force நிறுவனமும் நேற்று சனிக்கிழமை (08) இணைந்து நடத்திய சர்வதேச கடல்தின நிகழ்வு மாணவர் மத்தியில் கடல்சார் சூழலைப் பேணுமுகமாகப் பல்வேறு போட்டிகள் நிகழ்வுகள் நடாத்தப்பட்டு அதில் பங்குபற்றிய மற்றும் வெற்றிபெற்ற மாணவருக்கு சான்றிதழ் வழங்கும்
நிகழ்வு பாடசாலை முதல்வர் எஸ்.விஜயகுமார் தலைமையில் பாடசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் இடம்பெற்றது விழாவில் பிரதம அதிதியாக கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ஜெ.சுதாகரன் அவர்களும், கடல்சார் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட கடல்சார் சுற்றுச் சூழல் அதிகாரி ப.சதீஸ்குமார் அவர்களும், யாழ் மாவட்ட சுற்றாடல் முன்னோடி ஆலோசகர் ப.அருந்தவம் மற்றும் Clean ocean foce இன் வடமாகாணப் பிரதிநிதி ம.சசிகரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாகக்கலந்துகொண்டு, பாடசாலையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விழாவில் கடல் சூழலைச் சுத்தப்படுத்தும் பணி, மாணவரின் சுற்றுச் சூழல்சார் நாடக ஆற்றுகை என்பனவும் இடம்பெற்றது,
மாணவர்களும், பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்த பலரும், கடல்சார் சுற்றுச் சூழல் அதிகார சபையின் அதிகாரிகளும் ஆர்வத்துடன் இவ் விழாவில் கலந்து கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM