தெற்கு இளைஞர்­க­ளுக்கு இருக்கும் பிரச்­சி­னையே வடக்கு இளைஞர்­க­ளுக்கும் இருக்­கின்­றது. அத­னால்தான் வடக்கு இளைஞர்கள் ஆயு­த­மேந்தும் நிலைக்கு தள்­ளப்­பட்­டனர் என்­பதை தெற்கில் இருப்­ப­வர்கள் தற்­போது உணர்ந்­துள்­ளனர் என ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் யாழ். மாவட்ட அமைப்­பா­ள­ரு­மான இராம­நாதன் அங்­கஜன் தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய இளைஞர் சம்­மே­ளனம் நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை கொழும்பு சுக­த­தாச அரங்கில் இடம்­பெ­ற­வுள்­ளது.

நடை­பெ­ற­வுள்ள சம்­மே­ளனம் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்தும் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்­துத் ­தெ­ரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் பங்குபற்­ற­லுடன் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய இளைஞர் சம்­மே­ளனம் சுக­த­தாச அரங்கில் நாளை இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்த சம்­மே­ளனத்தில் வடக்கு, கிழக்கு, மலை­ய­க­ம் ­போன்ற பிர­தே­சங்­களில் இருந்தும் எமது இளைஞர், யுவ­திகள் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட இளைஞர்கள் அதில் கலந்­து­கொள்ள எதிர்­பார்க்­கப்­பட்­ட ­போதும் இட­ப்­பற்­றாக்­குறை கார­ண­மாக 500பேர் வரைக்­குமே கலந்­து­கொள்ள எமக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் இளைஞர், யுவ­திகள் எதிர்­நோக்­கி­வரும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்க ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­வ­தனால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தேசிய இளைஞர் சம்­மே­ள­னத்தில்  வடக்கு, கிழக்கில் இளைஞர், யுவ­திகள் கலந்­து­கொள்­வ­தற்கு ஆர்­வ­மாக இருக்­கின்­றனர்.  அதே­போன்று நாட்டில் இடம்­பெற்று வந்த மதவாதம் பிரி­வினை வாதங்­களை அடக்­கு­வ­தற்கும் ஜனா­தி­பதி நட­வ­டிக்கை எடுத்துள்­ள­துடன் சகல இன மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்­துள்ளார். 

மேலும் தெற்கு இளைஞர்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னையும் வடக்கு இளைஞர்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னையும் ஒரே மாதி­ரி­யா­கவே இருக்­கின்­றது. அதா­வது ஒட்டு மொத்த இளைஞர்­களும் இன்று எதிர்­கொள்ளும் பிர­தான பிரச்­சி­னை­யாக இருப்­பது தொழில் இல்­லா­மை­யாகும். அதனால் தான் வடக்கு இளைஞர்கள் அன்று ஆயும் ஏந்­து­வ­தற்கு கார­ண­மாக இருந்­தனர் என்­ப­தையும் தெற்கு இளைஞர்கள் இன்று உணர்ந்­துள்­ளனர்.

எனவே நாளை நடை­பெ­ற­வுள்ள ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தேசிய இளைஞர் சம்­மே­ள­னத்­தின்­போது இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன. அத்துடன்  13வருடங்களுக்கு பிறகு நடைபெறும் இந்த சம்மேளனம் ஒட்டுமொத்த இளைஞர் யுவதிகளுக்கும் புத்துணர்ச்சியை ஏற்படுத்துவதாக அமையும் என்றார்.